Saturday, March 17, 2018

சிறந்த சேவையளிப்போம்: ஏர்செல்லிலிருந்து மாறிய 15 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் உறுதி

Published : 16 Mar 2018 18:07 IST

பிடிஐ சென்னை

THE HINDU TAMIL



கோப்புப் படம்

நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டதில் இருந்து, ஏர்செல் வாடிக்கையாளர்கள் 15 லட்சம் பேர் ஏர்டெல் நிறுவனத்தின் சேவைக்கு மாறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஏர்டெல்லின் தமிழக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரி்த்துள்ளது.

இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் கேரளா மாநில தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் முரளி விடுத்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஏர்செல் நிறுவனம் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால்நோட்டீஸ் அளித்தபின்பும், டவர் பிரச்சினை காரணமாகவும், ஏராளமான வாடிக்கையாளர்கள் பல்வேறு செல்போன் நிறுவனங்களின் சேவைக்கு மாறி வருகின்றனர். அதில் போர்ட் இன் மூலம் மாறிய வாடிக்கையாளர்களில் பெரும்பகுதி ஏர்டெல்லுக்கு வந்துள்ளனர்.

ஏர்டெல் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர் மாறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏர்டெல் நிறுவனத்துக்கு வந்த அனைத்து வாடிக்கையாளர்களையும் வரவேற்கிறோம், சிறந்த சேவை அளிப்போம் என உறுதியளிக்கிறோம்.

தமிழக்தில் நெட்வொர்க் சேவையை மேம்படுத்த மேலும் 13 ஆயிரம் பிராட்பேண்ட் சைட்களை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் தமிழகத்தில் 95 சதவீத மக்களை சென்றடையும் வகையில் எங்கள் நிறுவனத்தின் நெட்வொர்க் வளர்ந்துள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10 லட்சம் பேர் தங்கள் நெட்வொர்குக்கு மாறிவிட்டதாக வோடபோன் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏறக்குறைய 2 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மாறியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024