6 மணி நேரம் சுத்தம் செய்ய உத்தரவு
புதுடில்லி: மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் பணியில் அடுத்த 2 வாரங்களுக்கு ஈடுபட வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி ஸ்வச்தா ஹி சேவா என்ற இயக்கத்தைக் கடந்த 15-ம் தேதி தொடங்கினார். இந்த இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி வரை நடக்கிறது. இந்த இயக்கத்தின் நோக்கம், சுகாதாரப்பணியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களையும் பணியில் ஈடுபடச் செய்வதாகும்.
இந்நிலையில் தூய்மை இந்தியா இயக்கம் டங்கி வரும் அக்டோபர் 2-ம்தேதியோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் வருவதையொட்டி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
அனைத்துத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் ஸ்வச்தா ஷர்மாதான் திட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மட்டும் ஈடுபடாமல், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் குறைந்தபட்சம் அடுத்த இரு வாரங்களுக்கு 6 மணிநேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். ஸ்வச்ஹதா ஹி சேவா இயக்கத்தைவெற்றிகரமாக்க உங்களின் பங்களிப்பு அவசியம். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment