'சாரிடானுக்கு தடை இல்லை'
Added : செப் 17, 2018 21:23 |
புதுடில்லி: வலி நிவாரணி மாத்திரையான, 'சாரிடான்' மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பல்வேறு விதமான நோய்களுக்கு, நிறைய மருந்து மாத்திரைகளை உட்கொள்வதற்கு பதிலாக, பல மருந்துகளை உள்ளடக்கிய, ஒரே மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இப்படி, இரண்டுக்கும் அதிகமான மருந்துகளை உள்ளடக்கி தயாரிக்கப்படும் மருந்துகள், மனித உடலுக்கு, தீங்கு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நாளடைவில், மருந்துகளுக்கு ஒத்துழைக்கும் தன்மையை, மனித உடல் இழந்துவிடும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 328 விதமான மருந்துகளை, தயாரிக்கவும், விற்பனை செய்யவும், மத்திய அரசு, சமீபத்தில் தடை விதித்தது.இந்நிலையில், தடை செய்யப்பட்ட, 328 மருந்துகளில், வலி நிவாரணியான, 'சாரிடான்' மாத்திரைகளுக்கு மட்டுமான தடையை விலக்குவதாக, உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டது.
Advertisement
No comments:
Post a Comment