காசி யாத்திரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
Added : செப் 25, 2018 05:10
சென்னை : மகாளய அமாவாசையை முன்னிட்டு, காசி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், அக்., 4ம் தேதி, மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை - சென்ட்ரல் வழியாக, மதுரா வரை செல்லும். இந்த யாத்திரை ரயிலில் பயணிப்போர், மகாளய அமாவாசை அன்று, பீஹார் மாநிலம், கயாவில் உள்ள விஷ்ணு கோவிலில், முன்னோருக்கு மரியாதை செலுத்தலாம். காசியில் உள்ள கங்கை யில் நீராடலாம். விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களுக்கு சென்று வரலாம்.
உ.பி., மாநிலம் - அலகாபாதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சேரும், திரிவேணி சங்கமத்திலும் நீராடலாம். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில், மானசாதேவி கோவிலில், தரிசனம் செய்யலாம். டில்லியில், குதுப்மினார், 'லோட்டஸ்' கோவில், தீன்மூர்த்தி பவன், இந்திரா நினைவகம் மற்றும், 'இந்தியா கேட்' செல்லலாம்.
மதுரா, கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலுக்கும் சென்று வரலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, நபருக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு. மேலும் தகவலுக்கு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின், சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்துக்கு, 90031 40681, 90031 40682 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment