காசோலை திரும்பி வந்தால் 2 ஆண்டு சிறை, இரு மடங்கு அபராதம்: வருகிறது புதிய சட்டத் திருத்தம்
Published : 26 Dec 2016 08:58 IST
காசோலை மோசடி வழக்குகளில் சிக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் இரு ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
‘அரசின் திட்டப்படி ரொக்க மில்லா பரிவர்த்தனையை கையாள வசதியாக காசோலை பயன்பாட் டினை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் காசோலை பரிவர்த்தனை களில் பெருமளவு மோசடி நடை பெறுகிறது. எனவே அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது’ என வியாபாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். காசோலை மோசடியால் பாதிக்கப் பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பணம் வாங்குவதும் கடினமாக இருப்பதாக தெரிவித் துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காசோலை மோசடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீ லித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘காசோலை மோசடி வழக்குகளில் சிக்குவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு பரிசீ லித்து வருகிறது. இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இத் தகைய கடுமையான விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளது’’ என்றார்.
தற்போதுள்ள சட்டத்தின்படி காசோலை மோசடி வழக்குகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடும். ஆனால் புதிய சட்டத் திருத்தத்தில் ஜாமீனில் வெளி வர முடியாத அளவுக்கு விதி களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் ஒரு மாதம் அவகாசம் அளித்து இரு தரப்புக்கும் இடையே பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். இதிலும் பிரச்சினை தீராவிட்டால் அடுத்த கட்டமாக காசோலை வழங்கியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த புதிய சட்டத் திருத்தத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 18 லட்சத்துக்கு மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 38,000 வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் உள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் 5 வரு டங்களுக்கு மேலாக நிலுவையில் இருப்பவை. மஹாராஷ்டிரா, குஜ ராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களில் தான் அதிக அளவில் காசோலை மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment