Friday, November 16, 2018

நெட்வொர்க் ஸ்பீடு: ஜியோ முதலிடம்!


  1. தொலை தொடர நிறுவனங்களுக்கான 4ஜி டேட்டா பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.


இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகிலிருந்தே பல்வேறு உச்சங்களைத் தொட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி அதிகளவு வாடிக்கையாளர்களைத் தனது சேவைக்குள் இணைத்து வரும் ஜியோ, நெட்வொர்க் சந்தையிலும் தனது பங்கை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் 4ஜி டேட்டா பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்திருப்பதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மை ஸ்பீடு போர்டல் செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 22.3 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. வெறும் 9.5 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் ஏர்டெல் நெட்வொர்க் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைந்திருந்தாலும் அவை தனித்தனி பிராண்டு பெயர்களிலேயே இயங்கி வருகின்றன. அவற்றின் டேட்டா வேகம் முறையே 6.4 எம்.பி.பி.எஸ். மற்றும் 6.6. எம்.பி.பி.எஸ் ஆக இருக்கிறது.

சமீபத்தில் ஓபன் சிக்னல் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 4ஜி டேட்டா வேகத்தில் ஏர்டெல் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது டிராய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையில் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. ஜூன், ஆகஸ்ட் மாதங்களிலும் ஜியோ முன்னிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024