ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை சீரமைக்க 13, 14ம் தேதி நீங்களும் வாங்க...!
Added : ஜூலை 09, 2019 00:11
செம்பாக்கம் : 'களமிறங்குவோம்; நமக்கு நாமே...' என, 23 பொதுநலச்சங்கங்கள் ஒன்றிணைந்து, வரும், 13, 14ம் தேதிகளில், தாம்பரத்தை அடுத்துள்ள, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை சீரமைக்க முடிவு செய்துள்ளன. இந்தப் பணியில், தன்னார்வலர்களும் கைகோர்க்க, நலச்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் கிடைக்காமல், மக்கள் திண்டாடி வருகின்றனர். அறிவிப்புஎதிர்காலத்தில், இதுபோன்ற நிலை ஏற்படாதிருக்க, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே...' என, பொதுநலச் சங்கங்கள், தன்னார்வலர்கள், நீர்நிலைகளை சீரமைக்க முன் வர வேண்டும் என, நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு செய்திகளும், வெளியிடப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, பொதுநலச் சங்கங்கங்கள் ஆர்வமுடன் களமிறங்கி உள்ளன. சென்னையில், சிட்லபாக்கம் ஏரி, சேலையூர் ஏரிகளை தொடர்ந்து, தற்போது, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை சீரமைக்கவும், பொதுநல அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
சுருங்கியது தாம்பரம் - சேலையூர் அடுத்த, செம்பாக்கம் நகராட்சியில் உள்ள, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, ஆக்கிரமிப்பால், 105 ஏக்கரில் இருந்து, 30 ஏக்கராக சுருங்கி விட்டது. இந்த ஏரியை சீரமைக்க, 23 பொதுநலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, வரும், 13, 14ம் தேதி களமிறங்குகின்றன.இதுகுறித்து, ராஜகீழ்ப்பாக்கம் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலர், சீதாராமன் கூறியதாவது:'தினமலர்' நாளிதழில் வெளியான, நீர்நிலைகள் தொடர்பான செய்திகள், நாமும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற, எண்ணத்தை எங்களிடம் உருவாக்கின. அனுமதி இதன் பயனாக, நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை சீரமைக்க தயாராகி விட்டோம்.
கலெக்டரிடம் அனுமதி கோரியுள்ளோம். சீரமைப்பு பணி, 13, 14ம் தேதிகளிலும், பின், விடுமுறை நாட்களிலும் தொடரும். இதில், 23 பொதுநலச்சங்கங்கள் கைகோர்க்கின்றன. ஆர்வமுள்ள தன்னார்வலர்களும் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு, 98845 06335 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அடுத்த கட்டமாக, வேங்கைவாசல் ஏரியையும் சீரைமக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment