Thursday, July 25, 2019

பி.ஆர்க்., சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை நிறைவு

Added : ஜூலை 25, 2019 01:12

சென்னை:பி.ஆர்க்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை முடிகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 'ஆர்கிடெக்ட்' கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க, தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, ஆன்லைன் பதிவு, ஜூலை, 15ல் துவங்கியது. இந்த பதிவு, நாளையுடன் முடிகிறது.மாணவர்கள், tneaonline.in என்ற இணையதளத்தில், விபரங்களை பதிவு செய்யலாம். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு முந்தைய, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. விளையாட்டு பிரிவுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும், சென்னையில் நடத்தப்படுவதாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.***

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024