Monday, July 29, 2019

சிறை தண்டனை, 'ஜாலி' அனுபவிக்கும் லாலு:

19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், 'சிகிச்சை'

ராஞ்சி:பீஹார் மாநில முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ், 71, மீதான, கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், 19 மாதங்களாக அவர் சிறை தண்டனை அனுபவித்தாலும், அதில், 17 மாதங்கள், மருத்துவமனைகளில், சகல வசதிகளுடன், சொகுசாகவே உள்ளார்.



ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரான, லாலு பிரசாத் யாதவ் மீது, பல ஆயிரம் கோடி ரூபாய், கால்நடை தீவன ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மூன்று வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின், ராஞ்சி நகரில் உள்ள, பிர்சா முண்டா மத்திய சிறையில், 2017 டிசம்பர் முதல் அடைக்கப் பட்டு உள்ளார்.

கடந்த, 17 மாதங்களாக, அந்த சிறையின் கைதியாக இருந்த போதிலும், 19 மாதங்கள், டில்லி மற்றும் ராஞ்சி நகரங்களில் உள்ள, அரசு மருத்துவமனைகளில், குளுகுளு, 'ஏசி' அறையில், கட்டில், மெத்தை, 40 போலீசார் பாதுகாப்புடன், சொகுசாகவே அவர் உள்ளார். அவருக்கு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர், மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு, கட்டணம் செலுத்தும் வார்டில், பல மாதங்களாக, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவருக்கு வந்த நோய் தான் குணமாகவில்லை. ராஞ்சி அரசு தலைமை மருத்துவ மனையின் தலைமை டாக்டர், ஒவ்வொரு வாரமும், சிறை நிர்வாகத்திற்கு அனுப்பும் கடிதத்தில், லாலுவின் உடல் நிலை சீராகவில்லை என தெரிவிப்பதால், தொடர்ந்து மருத்துவமனையிலேயே லாலு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு இடையே, மகன் திருமணத்திற்காக, சில நாட்கள், 'பரோலில்' வந்த லாலு, மீண்டும் ராஞ்சி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை போல, பல, வி.ஐ.பி.,கள், சிறை தண்டனையை, மருத்துவமனைகளில் கழிக்கும் நிலைமை, பீஹாரில் சகஜமாக உள்ளது.

எருமைகளின் கொம்புக்கு எண்ணெய்

இன்னொரு வழக்கிலும் சிக்குகிறார்பல நுாறு கோடி ரூபாய் கால்நடை தீவன ஊழலில், பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரின் கூட்டாளிகள் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் பழைய முறைகேடுகள், இப்போது வரிசைகட்டி, அம்பலமாகி வருகின்றன.எருமை மாடுகளின் கொம்புக்கு எண்ணெய் தடவஎனக் கூறி, மோசடியாக, 16 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டதும் அதில் ஒன்றாக அம்பலப்பட்டுள்ளது.


ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான, பீஹார் சட்டசபையில், கால்நடை தீவன ஊழல் விவகாரம் குறித்து, சமீபத்தில் விவாதிக்கப்பட்டது. ஆளும் தரப்பினர் அப்போது கூறியதாவது:கால்நடை தீவன

ஊழல் வழக்கின் ஓர் அங்கமாக, அப்போதைய, ஒருங்கிணைந்த பீஹாரில், எருமை மாடுகளின் கொம்புகளில் தடவ, 50 ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய், 16லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக, கள்ளக் கணக்கு காண்பிக்கப்பட்டது.

இதுபோல, ஏராளமான முறைகேடுகளை, முதல்வராக இருந்த லாலு செய்துள்ளார். கால்நடை தீவன முறைகேட்டில், 658 கோடி ரூபாய்க்கு இன்னும் கணக்கு காண்பிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பான வழக்குகள், சி.பி.ஐ., வசம் உள்ளதால், கணக்கை இன்னும் சரிகட்ட முடியவில்லை.

கால்நடை தீவன முறைகேட்டில் தொடர்பு உடையவர்கள், போலி பில்களை சமர்ப்பித்து, பல நுாறு கோடி ரூபாயை திருடியுள்ளனர். அந்த பணத்தில், மன்னர்கள் வாழும் அரண்மனை போல வீடுகளை கட்டி உள்ள னர். அந்த வீடுகளின் குளியல் அறைகள் கூட, பளிங்கு தரைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, பல தகவல்கள், பீஹார் சட்டசபையில், சமீபத்தில் விவாதிக்கப் பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024