மருத்துவ தேர்வு தேதிகள் மாற்றம்
Added : ஜூலை 26, 2019 23:39
சென்னை, ஆக. 5ல் நடைபெற இருந்த மருத்துவ தேர்வுகள் வேலுார் லோக்சபா தேர்தலையொட்டி வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறியதாவது:
வேலுார் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ஆக. 5ல் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வுகள் மாநில முழுவதும் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி மருத்துவம் பல் மருத்துவம் இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ கல்லுாரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஆக. 6 மற்றும் 7ல் நடத்தப்படும்.இதுதொடர்பான விவரங்கள் www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவ பல்கலையின் கீழ் வரும் அனைத்து கல்லுாரிகளுக்கும் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் 'பப்ளிக் ஹெல்த் ஜர்னலிசம்' என்ற ஓராண்டு படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும். புதிய பாட திட்டத்தின்படி நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் முறை சிகிச்சை விபரங்களை தெரிவிக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.இவ்வாறு சுதா சேஷய்யன் கூறினார்
No comments:
Post a Comment