ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் இல்லை உயர்நீதிமன்றம் உத்தரவு
Added : ஜூலை 24, 2019 22:39
மதுரை, ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
Added : ஜூலை 24, 2019 22:39
மதுரை, ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை திருப்பரங்குன்றம் ஆரோக்கியமேரி தாக்கல் செய்த மனுசென்னையில் ஒரு பள்ளியில் 1967 ஜூலை 1 முதல் 1978 செப்.,30 வரை இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தேன். 1978 செப்.,30 ல் ராஜினாமா செய்தேன். விதிகள்படி ஓய்வூதியம் பெற எனக்கு தகுதிகள் உள்ளன. ஓய்வூதியம் கோரி தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு பல முறை மனு அனுப்பினேன். நிராகரிக்கப்பட்டது. ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆரோக்கியமேரி மனு செய்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு ராஜினாமாவிற்கும், விருப்ப ஓய்விற்கும் வேறுபாடு உள்ளது. அரசியல் கட்சியில் சேர மற்றும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் சுய விருப்ப அடிப்படையில் உடனடியாக ராஜினாமா செய்கின்றனர். அதை ஏற்று பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். விருப்ப ஓய்வு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஒரு ஊழியர் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்தால், 3 மாதங்களில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் முடிவெடுக்கும். மனுதாரர் கருணை அடிப்படையில் படி வழங்க கோருகிறார். அது சில சிறப்பு சூழ்நிலைகளில் வழங்கப்படுகிறது. மனுதாரரின் ராஜினாமாவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் ஓய்வூதியத்தை உரிமையாக கோர முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment