இதே நாளில் அன்று
Added : ஜூலை 29, 2019 20:38
ஜூலை 30, 1924 எழுத்தாளரும், பேராசிரியருமான, மா.நன்னன்:
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில், 1924, ஜூலை, 30ல் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலையில், புலவர் பட்டமும், சென்னைப் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார். துவக்கப் பள்ளி ஆசிரியராக பணியை துவங்கிய இவர், உயர்நிலைப் பள்ளி, பயிற்சி கல்லுாரி, கலைக் கல்லுாரி, மாநிலக் கல்லுாரிகளில் பணி புரிந்துள்ளார்.தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக, 1980 -- 1983 வரை பணியாற்றினார். வயது வந்தோர் கல்வி வாரிய துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். எழுத்தறிவித்தலில், 'நன்னன் முறை' எனும் புதிய முறையை ஏற்படுத்தினார். சென்னை தொலைக்காட்சியில், 17 ஆண்டுகள், 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தினார். பல பாடங்கள், துணைப்பாட நுால்களையும் எழுதிய அவர், 1990-2010 காலகட்டத்தில், 70 நுால்களை எழுதினார். தமிழ்ச் செம்மல், திரு.வி.க., விருதுகளை பெற்றார். 2017, நவம்பர் ௭ல் காலமானார்.அவர் பிறந்த தினம், இன்று.
No comments:
Post a Comment