தனியார் பல்கலை அரசாணை வெளியீடு
Added : ஜூலை 24, 2019 23:53
சென்னை,:தமிழகத்தில், தனியார் பல்கலைகள் துவங்குவதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளை தவிர, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்தில், பல்வேறு நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. இவை, பல்கலைகளுக்கு நிகரான கல்வி நிறுவனம் என்ற வகையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நேரடியாக பல்கலை என்ற அங்கீகாரத்துடன், தனியார் பல்கலைகளை துவங்குவதற்கு, தமிழக அரசு, புதிய சட்டம் இயற்றியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தனியாக பல்கலைகள் துவங்குவதற்கு, அனுமதி அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் அடங்கிய அரசாணையை, தமிழக உயர் கல்வி துறை, நேற்று வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment