Monday, July 29, 2019

நெருங்கும் ஆடி அமாவாசை சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

Added : ஜூலை 29, 2019 00:05



ஸ்ரீவில்லிபுத்துார்:ஆடி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, ஆடி அமாவாசையை ஒட்டி, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முதல், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலையில் இருந்து, பக்தர்கள் வருகை அதிகரித்தது.அதிகாலை, 5:00 மணிக்கு, தாணிப்பாறை பாதை திறக்கப்பட்டு, தமிழகத்தின் பல பகுதியில் இருந்து வந்த பக்தர்கள், மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை என்பதால், மாலை, 4:00 மணி வரை, 15 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், மலையேறி தரிசனம் செய்தனர்.பக்தர்கள், மலை அடிவாரத்தில், முடி காணிக்கை செலுத்தி, கோவிலுக்கு சென்றனர்.
 
ஏராளமான பக்தர்கள், தாணிப்பாறை பகுதியில் உள்ள தோப்புகளில் தங்கியுள்ளனர்.இன்று பிரதோஷம் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலை அடிவார பகுதியில் உள்ள அன்னதான மடங்களில், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024