Tuesday, July 30, 2019

நவ ஜோதிர்லிங்க தரிசனம் சிறப்பு ரயில் அறிவிப்பு

Added : ஜூலை 29, 2019 22:08

சென்னை:நவ ஜோதிர்லிங்கங்களை, ஒரே யாத்திரையில் தரிசிக்க வசதியாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தனி, 'ஏசி' சிறப்பு ரயிலை இயக்குகிறது.

இந்த ரயில், மதுரையில் இருந்து, ஆகஸ்ட், 25ல் புறப்பட்டு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை பெரம்பூர் வழியாகச் செல்லும்.இந்த யாத்திரையில், மத்திய பிரதேசத்தில், மகா காளேஸ்வரர், ஓம்காரேஸ்வரர்; குஜராத்தில் சோம்நாதர்; மஹாராஷ்டிராவில், பீம்சங்கர், திரையம்பகேஸ்வரர், குருஸ்ணேஸ்வரர், அவுங்நாக்நாதர், பார்லி வைத்யநாதர் கோவில்களுக்கு சென்று வரலாம்.ஆந்திராவில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கும் செல்லலாம்.
மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவில், 'ஏசி' மூன்றாம் வகுப்பில் பயணிக்க, 39 ஆயிரத்து, 290 ரூபாய்; 'ஏசி' இரண்டாம் வகுப்பில் பயணிக்க, 43 ஆயிரத்து, 700 ரூபாய்; 'ஏசி' முதல் வகுப்பில் பயணிக்க, 53 ஆயிரத்து, 510 ரூபாய் செலுத்த வேண்டும்.மேலும் தகவலுக்கு, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்களிலும், irctctourism.com என்ற, இணையதள முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024