Tuesday, August 27, 2019

150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு சேர்க்கை

Added : ஆக 26, 2019 22:25


சென்னை:முத்துகுமரன் மருத்துவ கல்லுாரியில் உள்ள, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மருத்துவ கல்வி இயக்ககம், இன்று, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.

போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, சென்னை, மாங்காடு முத்துகுமரன் மருத்துவ கல்லுாரியை, உறுப்பு கல்லுாரிகள் அங்கீகார பட்டியலில் இருந்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நீக்கியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், இந்தாண்டுக்கு மாணவர் சேர்க்கை நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, மாணவர் சேர்க்கை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று நடைபெற உள்ளது.இந்த கல்லுாரியில், மொத்தமுள்ள, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, தலா, 75 இடங்கள் உள்ளன. இந்த கவுன்சிலிங்கில், ஏற்கனவே, விண்ணப்பித்த மாணவர்கள் நேரடியாக பங்கேற்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

‘UGC will debar univs that are found violating PhD quality standards’ TALKING TO TOI

‘UGC will debar univs that are found violating PhD quality standards’ TALKING TO TOI  The University Grants Commission (UGC) is rolling out ...