Monday, November 4, 2019


பழைய கட்டட அனுமதி; வீட்டிலிருந்தே பார்க்கலாம்

Added : நவ 04, 2019 00:15

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட, கட்டுமான திட்ட அனுமதி விபரங்களை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., விரைவுபடுத்தி உள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில், சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்புகள், மனைப் பிரிவுகள் ஆகியவற்றுக்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்குகிறது. இதில், 2006 முதல் வழங்கப்பட்ட திட்ட அனுமதி விபரங்கள் மட்டுமே, சி.எம்.டி.ஏ., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு முந்தைய காலத்தில் வழங்கப்பட்ட திட்ட அனுமதி விபரங்களை அறிய, பொது மக்கள், சி.எம்.டி.ஏ., அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, பழைய குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், அது முறையாக அனுமதிக்கப்பட்ட கட்டடமா என்பதை அறிய சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, பழைய கட்டட அனுமதி விபரங்களை, இணையதளத்தில் வெளியிட, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்காக, 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட, திட்ட அனுமதி விபரங்களை, மின்னணு மயமாக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த விபரங்கள் விரைவில், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. அதன்பின், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வழியாக, 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட கட்டுமான திட்ட அனுமதி விபரங்களை பார்க்க முடியும்.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...