Monday, November 4, 2019


முதுநிலை பட்டப்படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு

Added : நவ 04, 2019 00:16


சென்னை : முதுநிலை பட்டப் படிப்புக்கான, இரண்டு நுழைவு தேர்வுகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வதற்கு, பல்வேறு வகை நுழைவு தேர்வுகளில், தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக, நிர்வாக படிப்பு தொடர்பான, எம்.பி.ஏ., படிக்க, 'சிமேட்' என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான, சிமேட் நுழைவு தேர்வு, ஜன., 28ல் நடக்க உள்ளது. அதேபோல், பார்மஸி படிப்புக்கான உயர்கல்வி நுழைவு தேர்வும், ஜன., 28ல் நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த, 1ல் துவங்கி விட்டது; 30ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், விபரங்களை, https://nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024