Sunday, November 10, 2019

பராசரன் யார்

Added : நவ 10, 2019 04:20

அயோத்தி வழக்கில் மூத்த வழக்கறிஞர் பராசரன் 93 வாதம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவரது தளராத உழைப்பும் நினைவாற்றலும் அனைவரையும் கவர்ந்தது.'2.77 ஏக்கர் நிலத்தை ஹிந்து அமைப்பான ராம் லல்லாவுக்கு வழங்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் பராசரன்.இவரது தலைமையில் யோகேஸ்வரன் அனிருத் சர்மா ஸ்ரீதர் அஸ்வினி குமார் உள்ளிட்ட வழக்கறிஞர் குழு இயங்கியது. வழக்கு விசாரணையின் போது இவர் 'ராமர் பிறந்த இடத்தில் 433 ஆண்டுகளுக்கு முன் மசூதி கட்டி பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும். அயோத்தியில் எந்த மசூதியில் வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம். அங்கு 50 - 60 மசூதிகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு ராமர் பிறந்த இடம் இது மட்டுமே. இதனை மாற்ற முடியாது' என வாதாடினார்.

40 நாள் விசாரணையில் எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாமல் வாதத்தில் பங்கேற்றார்.விசாரணையின் கடைசி நாளில் முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவானுக்காக நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்தார். அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.1927 அக். 9ல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். 1958ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பல ஆண்டுகள் இருந்துள்ளார். 1979ல் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த போது தலைமை வழக்கறிஞராக இருந்தார். 1983 - 1989 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். 2003ல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் 2011ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. 2012 - 18 ராஜ்யசபா நியமன எம்.பி. யாக பதவி வகித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024