Added : ஆக 02, 2020 00:34
சென்னை; 'சட்ட படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 5ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் பதிவாளர், விஜயலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில், ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 5ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை, www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், வரும், 5ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பல்கலை மற்றும் கல்லுாரிகளில், 10ம் தேதி முதல் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். நிரப்பிய விண்ணப்பங்களை, செப்., 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி, பல்கலை இணையதளத்தில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment