Thursday, March 4, 2021

10 ஆண்டுக்கு பின் ரயிலை பார்த்த தேனி மக்கள்: மலர் தூவி, செல்பி எடுத்து உற்சாகம்தேனி வந்த சோதனை ரயில் இன்ஜினை வரவேற்ற பொதுமக்கள்.

10 ஆண்டுக்கு பின் ரயிலை பார்த்த தேனி மக்கள்: மலர் தூவி, செல்பி எடுத்து உற்சாகம்தேனி வந்த சோதனை ரயில் இன்ஜினை வரவேற்ற பொதுமக்கள்.

தேனி  4.3.2021 

மதுரை - போடி அகல ரயில்பாதை வழித்தடத்தில் நேற்று தேனி வரை இன்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலைப் பார்த்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

போடி-மதுரை இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில்கள் அகலப்பாதையாக மாற்றுவதற்காக 2010 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. சுமார் 90 கி.மீ. தூரம் உடைய இப்பாதையில் ரூ.450 கோடி மதிப்பில் பணி கள் தொடங்கின. குறைவான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல காரணங்களால் இப்பணி தொய் வடைந்தது.


இந்நிலையில் கடந்த 2 ஆண்டு களாக இப்பணி வேகம் எடுத்தது. இருப்பினும் கரோனா, வடமாநிலத் தொழிலாளர் பற்றாக்குறை ஆகி யவற்றால் மீண்டும் பணிகள் தாம தமாயின.

கட்சிகள், பொதுமக்கள், வர்த் தகர்களின் தொடர் கோரிக்கையால் கடந்த 6 மாதமாக பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஏற்கெனவே மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை சோதனை ஓட்டம் முடிந்திருந்தது. இதன் அடுத்தகட்டமாக நேற்று தேனி வரை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டிக்கு பகல் 12 மணிக்கு வந்த ரயில் இன்ஜின் பின்னர் ஆங்காங்கே மெதுவாக இயக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு தேனிக்கு வந்தது. வழிநெடுகிலும் பொதுமக்கள் இருபுறமும் நின்று ரயில் இன் ஜினை வரவேற்று மலர்தூவி செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ரயிலைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இன்ஜின் சோதனை ஓட்டம் முடிவடைந்துள்ளது. விரையில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடைபெறும்.

ஜூன், ஜூலையில் ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது. போடி வரை தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024