Thursday, March 4, 2021

மகளின் படிப்புக்காக எடுத்து சென்றபோது விவசாயியிடம் ரூ.90 ஆயிரம் பணம் பறிமுதல்

மகளின் படிப்புக்காக எடுத்து சென்றபோது விவசாயியிடம் ரூ.90 ஆயிரம் பணம் பறிமுதல்


செய்யாறு அருகே மகளின் படிப்பு செலவுக்காக விவசாயி எடுத்துச் சென்ற ரூ.90 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் மாலை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, செய்யாறு அடுத் துள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கூர் கூட்டுச்சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோனிகா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ் வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை யிட்டதில், இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.90 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், காரில் வந்திருந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த விவசாயி என்றும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் படித்து வரும் மகளின் படிப்பு செலவுக்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றதால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், செய்யாறு தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராஜிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்தப் பணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024