Thursday, March 4, 2021

ஒரு கப் தேநீர் விலை ரூ.1,000!

ஒரு கப் தேநீர் விலை ரூ.1,000!

Added : மார் 03, 2021 20:39

கோல்கட்டா:கோல்கட்டாவில் உள்ள ஒரு கடையில், ஒரு கப் தேநீர், 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கை, தேநீர் குடிப்பதில் தான் துவங்குகிறது. சாதாரணமாக, ஒரு கப் தேநீர், 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், முகுந்த்புர் பகுதியில் உள்ள, நிர்ஜஷ் டீ ஸ்டாலில், 'போ லே' என்ற ஒரு தேநீர் ரகம், ஒரு கப், 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும், இந்தக் கடையில், 100 வகையான தேநீர் கிடைக்கிறது. இது குறித்து, இந்த கடையின் உரிமையாளர் பார்த்தா பிரதிம் கங்குலி கூறியதாவது:ஏழு ஆண்டுகளுக்கு முன், இந்த தேநீர் கடையை துவக்கினேன். வாடிக்கையாளர்களை கவர, 'சில்வர் நீடில் ஒயிட் டீ, கிரீன் டீ, பிளாக் டீ, செம்பருத்தி டீ, லாவண்டர் டீ, ஒயின் டீ, துளசி இஞ்சி டீ, டீஸ்டா வேலி டீ, மகாய்பாரி டீ' என, பல தேநீர் வகைகளை தயாரித்தேன். டார்ஜிலிங் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் விளையும், விதவிதமான தேயிலைகளை இறக்குமதி செய்து, அவற்றை, சரியான தட்ப வெப்ப நிலையில் பாதுகாத்து, பதப்படுத்தி, சுவைமிக்க தேநீர் தயாரிக்கிறேன். அதனால், என் கடையில் விற்கப்படும் தேநீரின் மவுசு, உலகம் முழுதும் பரவியது.

இதையடுத்து, 'சில்வர் நீடில் ஒயிட் டீ' என்ற, ஒரு வகை தேநீர் தயாரிக்கும் யோசனை உதித்தது. சில்வர் நீடில் ஒயிட் டீ வகையை விளைவிக்க, மூன்று மடங்கு, அதிக காலம் ஆகும். அதுபோல, உற்பத்தி செலவும், மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அது போல், 'போ லே' வகை தேநீர், கப் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் என, நிர்ணயித்தேன். பணக்கார வாடிக்கையாளர்கள், இந்த தேநீரை விரும்பிக் கேட்டு பருகுகின்றனர்.இந்த டீத் துாளின் விலை, 1 கிலோ, 3 லட்சம் ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024