Friday, March 5, 2021

பயணியர் இல்லாததால் 12 விமான சேவைகள் ரத்து

பயணியர் இல்லாததால் 12 விமான சேவைகள் ரத்து

Added : மார் 05, 2021 01:09

சென்னை:போதிய பயணியர் இல்லாததால் மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது முழு அளவில் விமானங்கள் இயங்கி வருகின்றன. சென்னை விமான நிலையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து 25 ஆயிரம் 30 ஆயிரம் பயணியர் வந்து செல்வர்.

இந்நிலையில் நேற்று சென்னைக்கு வந்து சென்ற 231 விமானங்களில் 19 ஆயிரம் பேர் மட்டுமே பயணித்தனர். நேற்று காலை விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி , கவுஹாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் 12 விமான சேவைகள் போதிய பயணியர் இல்லாததால் ரத்து செய்யப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024