Monday, March 1, 2021

தஞ்சையில் காலை வரை பனிப்பொழிவு: ரம்மியமாக காட்சியளித்த பெரியகோவில்!

தஞ்சையில் காலை வரை பனிப்பொழிவு: ரம்மியமாக காட்சியளித்த பெரியகோவில்!

Added : பிப் 28, 2021 23:27

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பனிமூட்டம் காரணமாக, பெரியகோவில் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

தஞ்சை மாவட்டத்தில், நேற்று காலை, 8 மணி வரை மாவட்டம் முழுதும், பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. காலை, 8 மணிவரை கூட, சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில், பனிமூட்டத்தால் முற்றிலும் மறைந்ததால், கோவில் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தது. அதேநேரம் கோவிலின் கோபுரம் பனியால் சூழப்பட்டு இருந்ததால், சுற்றுலா பயணிகள், கோபுரத்தின் அழகை முழுமையாக கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். கோவில் முழுதும் ரம்மியமாக பனி சூழ்ந்து இருந்தது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.புதுக்கோட்டையில் கடும் பனிப்பொழிவு: புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், கீரனுார், ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை, 9 மணி வரை கடும் பனிப்பொழிவு நீடித்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து, முகப்பு விளக்குடன் சென்றன. பனிப்பொழிவால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை போன்ற மலைப்பகுதிகள், பனிப்பொழிவு காரணமாக, மலைகள், வானத்துடன் ஒட்டி இருப்பது போல் அழகாக காட்சியளித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024