Wednesday, June 16, 2021

நெல்லை எக்ஸ்பிரஸ் உட்பட 42 ரயில்கள் பயணியர் வருகை குறைவால் ரத்து

நெல்லை எக்ஸ்பிரஸ் உட்பட 42 ரயில்கள் பயணியர் வருகை குறைவால் ரத்து

https://www.dinamalar.com/news_detail.asp?id=2785569

Added : ஜூன் 16, 2021 01:11

சென்னை:பயணியர் வருகை குறைவால், சோழன், உழவன், நீலகிரி, நெல்லை, மதுரை, ராமேஸ்வரம், ஏற்காடு எக்ஸ்பிரஸ் உட்பட, தமிழகத்தில் 42 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:*சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் - ஐதராபாத் இடையே தினமும் இயக்கப் படும் ஐதராபாத் சிறப்பு ரயில்;

சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையே தினமும் இயக்கப்படும் ஏற்காடு சிறப்பு ரயில்

*சென்னை எழும்பூர் - திருச்சி; சென்னை எழும்பூர் - கேரள மாநிலம் கொல்லம் இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்

*சென்னை எழும்பூர் - தஞ்சை இடையே இயக்கப்படும் உழவன் சிறப்பு ரயில்;

சென்னை சென்ட்ரல் - கேரள மாநிலம் ஆலப்புழா இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்

*சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ்; சென்னை சென்ட்ரல் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்

*சென்னை எழும்பூர் - -மன்னார்குடி; தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள்

*சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம்; நாகர்கோவில் - கோவை; மதுரை - கேரள மாநிலம் புனலுார் இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்

*திருவனந்தபுரம் - மதுரை சிறப்பு ரயில் இந்த ரயில்கள் எல்லாம், இன்று முதல், ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் அனைத்தும் இரு வழியிலும் ரத்தாகி உள்ளன.

வாராந்திர ரயில்கள்

*சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே, வாரத்தில் மூன்று நாள் இயக்கப்படும் சிறப்பு ரயில்

*சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில்

*தாம்பரம் - நாகர்கோவில் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில்

*சென்னை எழும்பூர் - மதுரை இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் ரயில்இந்த ரயில்கள் எல்லாம் இன்று முதல், ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன

*சென்னை சென்ட்ரல் - கோவை வாராந்திர சிறப்பு ரயில், கோவையில் இருந்து, 18, 25ம் தேதிகளிலும், சென்ட்ரலில் இருந்து, 19, 26ம் தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது

*கேரள மாநிலம் திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ்,

*திருவனந்தபுரத்தில் இருந்து, 19, 26ம் தேதிகளிலும், எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, 20, 27ம் தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது

*புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில், புதுச்சேரியில் இருந்து, 20, 27ம் தேதிகளிலும், கன்னியாகுமரியில் இருந்து, 21, 28ம் தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024