Wednesday, November 7, 2018

எம்.ஜி.ஆருக்கு 'நாடோடி மன்னன்'... ரஜினிக்கு 'முத்து'... விஜய்க்கு சர்காரா? - சர்கார் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு 

 


`துப்பாக்கி'யில் அமைதியை குலைக்கும் தீவிரவாதம், `கத்தி'யில் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் அரசியல் பேசிய விஜய் - முருகதாஸ் காம்போ, `சர்காரி'ல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் தேர்தல் முறைகேடுகளை பற்றி பேசியிருக்கிறது. மூன்றாவது முறையாக மெசேஜ் சொல்லும் இந்தக் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கிறதா?



கால் வைத்த இடங்களில் எல்லாம் சக போட்டியாளர்களை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட் முதலை விஜய்! ஐ.டி கம்பெனிகளில் இவரைப் பற்றி பாடமெடுக்கும் அளவுக்கு சூதுவாது தெரிந்தவர். ஐந்தாண்டுகள் கழித்து, தேர்தலுக்கு ஓட்டுப்போட பெரும் பரபரப்புகளுக்கு இடையில் இந்தியா வந்திறங்குகிறார்! ஆனால், அவரின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட, மீடியாவின் பசிக்கு தலைப்பு செய்தியாகிறார். ஒருபுறம், உலகமே கண்டு அரளும் கார்ப்பரேட் கிரிமினலான தன்னையே ஏமாற்றிவிட்டார்களென தலையை சூடாக்கும் ஈகோ... மற்றொருபுறம் நெஞ்சை சுடும் தமிழகத்தின் வறுமை... - இரண்டும் சேர்ந்து அணலாக கொதிக்க, அரசியல்வாதிகளோடு நீயா நானா ஆட்டம் ஆடுகிறார். அந்த அணல் எதிரிகளை சாம்பலாக்கியதா, இல்லையா என்பதே மீதிக்கதை.

சுந்தர் ராமசாமியாக பாஸிட்டிவ் எனர்ஜி தெறிக்கும் விஜய்! படத்திற்குப் படம் அழகில் இளமையும் நடிப்பில் முதிர்ச்சியும் ஏறிக்கொண்டே செல்கிறது! `சர்கார்' முழுக்க விஜயின் சாகசம்தான்! கை நரம்பு முறுக்கேற அடிக்கும் சண்டைக்காட்சிகள், படபடவென பொரிந்து தள்ளும் சீரியஸ் உரைகள், ஒவ்வொரு ஸ்டெப்பையும் தனக்கானதாய் மாற்றி ஆடும் அந்த துள்ளல், வில்லன்களை கடுப்பேற்றும் வசனங்களில் தெறிக்கும் நக்கல், ஃப்ரேமுக்கு ஃப்ரேம்... எங்கும் எதிலும் விஜய்! `கத்தி'யில் ஒன்றிரண்டு கலங்க வைக்கும் காட்சிகள் என்றால் இதில் அப்படியான காட்சிகள் மூன்று மடங்கு அதிகம்! அத்தனை காட்சிகளிலும் குடும்பங்களின், தாய்மார்களின் ஓட்டுகளை அள்ளிவிடுவார்! அவரின் சினிமா கேரியரைவிட அரசியல் முன்னெடுப்புக்கு `சர்கார்' அதிகம் உதவும்!




கொள்ளை அழகாக கீர்த்தி சுரேஷ். அறிமுக காட்சியிலும் பாடல் காட்சிகளிலும் இதயங்களை திருடுபவர் அதன்பின் அவரே காணாமல் போய்விடுகிறார். அமைதியாய் இருந்தே அதிகமாய் மிரட்டுகிறார் வரலட்சுமி! இரண்டாம்பாதியில் அவர் வரும் காட்சிகள் எல்லாம் மெல்லிய நடுக்கத்தை படரவிடுகின்றன. சலனமே இல்லாமல் மாத்திரை கொடுக்கும் காட்சியில் கோலிவுட்டின் சூப்பர் வில்லன் சரத்குமாரின் பிள்ளையாக பதினாறடி பாய்கிறார்! வழக்கமான 'ஹேய்ய்ய்ய்' வில்லியாக அவரைக்காட்டாமல் காரியக்கார அரசியல்வாதியாக காட்டியதில் ஜெயிக்கிறார் முருகதாஸ்!

மாண்புமிகு அரசியல்வாதியாக பழ.கருப்பையா! நிஜமாகவே அரசியலில் பழம் தின்று மரம் வளர்த்தவர் என்பதால் அனாயசமாக ஸ்கோர் செய்கிறார்! ஒரு காட்சியில் வரலட்சுமியும் அவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்! ஆனாலும், அவரை கொஞ்சமே கொஞ்சமாக ஓவர்டேக் செய்கிறார் ராதாரவி! காலம் முழுக்க இரண்டாம் இடத்திலேயே இருப்பவர் எப்படி இருப்பார்? எகத்தாளமும் சேட்டையுமாக அரைகுறை அறிவோடு அப்படியே இருக்கிறார் ராதாரவி! யோகிபாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடி. அளவும் நூறு வாலாவாக இல்லாமால் பத்தாயிரம் வாலாவாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.



பாடல்கள் வந்தபோது எழுந்த முணுமுணுப்புகளை எல்லாம் பின்னணி இசையில் அடக்கி இருக்கிறது இசைப்புயலின் மந்திர விரல்கள்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தீம் இசை என ஏரியா பிரித்து வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் ஏ.ஆர்.ரஹ்மானும் குதுப்-இ-க்ரிபாவும். கிட்டதட்ட, மூன்று மணிநேர படத்தின் அலுப்பை வெகுவாக குறைத்திருக்கிறது அவர்களின் பின்னணி இசை! பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் சிறப்பு! பாடல்கள் இடம்பெற்ற இடம்தான் பெரும் இடைஞ்சல்.



முருகதாஸின் படங்களில் டெக்னிக்கல் டீம் எப்போதும் மிரட்டும்! `சர்காரி'லும் `செம்ம' சொல்லவைக்கின்றது அவரின் குழு! `அங்கமாலி டைரீஸி'ன் கிரிஷ் கங்காதரன்தான் ஒளிப்பதிவு. தனக்குப்பிடித்த மஞ்சள் டோனில் மொத்த பரபரப்பையும் நமக்கு கடத்துகிறார்! தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு ஸ்மார்ட்டான திறமையான ஒளிப்பதிவாளர் என்ட்ரி கொடுத்ததில் மகிழ்ச்சிசாரே! கேமராக்கண்கள் கேரளம் என்றால் சண்டையமைப்பு அக்கட தேசத்தில் அதிரடிக்கும் ராம் - லக்ஷ்மண் இணை. ஒவ்வொரு அடியும் தட் தட்டென நம் உடலே அதிர அதிர விழுகிறது! சினிமாத்தனத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் வெறித்தனம் இன்னும் கூடியிருக்கும். ஒரு பக்கம் ஹைடெக் கார்ப்பரேட் மான்ஸ்டரின் ஸ்டைலிஷ் உலகம் இன்னொருபக்கம் வெள்ளையும் அழுக்குமான அரசியல் உலகம். இரண்டையுமே சிறப்பாக பேலன்ஸ் செய்து கண்முன் காட்டுகிறார் கலை இயக்குநர் டி.சந்தானம்!

'நறுக்' எடிட்டிங் முருகதாஸ் படங்களின் பலம்! ஆனால் சர்காரின் நீளம் ஸ்ரீகர் பிரசாத்தின் சிசர்கள் இன்னும் சிறப்பாக வெட்டியிருக்கலாமோ என நினைக்க வைக்கிறது! 'இங்கே பிரச்னைக்கு தீர்வு தேவை இல்ல, இன்னொரு பிரச்னைதான் தேவை... ', 'கடல்ல அஸ்தியை கரைப்பாங்க... நான் என் மீனவ அப்பாவை கரைச்சேன்' போன்ற வசனங்கள் செம ஷார்ப்! வசனத்தில் ஜெயிக்கும் முருகதாஸும் ஜெயமோகனும் திரைக்கதையில் லாஜிக்கிடம் தோற்றிருக்கிறார்கள்.

முதல்பாதியில் காட்சியமைப்புகளை நம்பாமல் சண்டைகளையே அதிகம் நம்பியது போல இருக்கிறது! இந்த இயக்குநர் - ஹீரோ காம்போவிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இண்டர்வெல் பிளாக்கும் அதைநோக்கிய திரைக்கதையும் வீக்காக இருக்கின்றன! இரண்டாம் பாதியில் வரலக்ஷ்மியுடன் விஜய் ஆடும் பரமபத விளையாட்டு செம சூடு! ஆனால், அதுவே வரலட்சுமியை முன்னாலேயே கதையில் கொண்டு வந்திருக்கலாமே என கேட்க வைக்கிறது! ஒரு அரசியல் படத்தை அரசியல் பாடமாக மாற்ற நினைத்ததில் அத்தனை செயற்கைத் தனங்கள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.



நடப்பு அரசியலோடு படத்தை வெகுவாக கனெக்ட் செய்வதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர். முழங்கை ஸ்லீவ் - 'பாப்பா' அடைமொழியோடு வரலஷ்மி, அரசியலில் கோலோச்சும் இரட்டையர்கள், எதிர்த்து கேள்வி கேட்டால் கலவரத்தை தூண்டிவிட்டு வேண்டாதவர்களை போட்டுத்தள்ளுவது, சாமானிய சமூக ஆர்வலர்களைக்கொண்ட மாற்று இயக்கம், அரசியல்வாதிகளின் முகங்களை எல்லா இடங்களிலும் பதிப்பதற்கு பின்னாலுள்ள பிராண்டிங் என பல விஷயங்களை பேசியிருப்பது தைரியம்தான்! தமிழக ரசிகர்களால் நிச்சயம் பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியும். சில இடங்களில் பிரசார நெடி அதிகமாக இருக்கிறது! இரண்டாம் பாதியின் முக்கால்வாசி காட்சிகள், விஜய் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் கொள்கை அறிக்கையை விஷுவலாய் பார்த்தது போன்ற ஃபீல். விஜய் ஆரம்பிக்கும் கட்சின்னு கற்பனையா சொல்றோம், கற்பனையா..!

சில இடங்களில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு ஹீரோ வழியாகவே பதில் சொல்லியிருப்பது புத்திசாலித்தனம்! ஆனால் அதைத்தாண்டியும் லாஜிக் இடறல்கள் இல்லாமலில்லை. சூழ்ச்சி எனத்தெரிந்த பின்னும் அவ்வளவு புத்திசாலியான வரலக்ஷ்மி ஒரு இடத்தில் தலையைக்கொடுப்பது ஏன்? மத்திய அரசைப்பற்றி ஒரு குட்டி வசனம்கூட இல்லை... மாநிலத்தையே குழப்பத்தில் தள்ளும் அரசியல் விளையாட்டில் மத்திய அரசின் பங்கு கொஞ்சம்கூட இருக்காதா என்ன? இவை எல்லாம் படம்பார்க்கும்போதே தோன்றுவதால் படத்தோடு ஒன்றிப்போவது கொஞ்சம் குறைகிறது! விஜய்யின் `கார்ப்பரேட் கிரிமினல்' எனும் அடைமொழிக்கு திரைக்கதையில் கொஞ்சம் கூட நியாயம் சேர்க்காதது பெரும் ஏமாற்றம். அந்த ஒற்றை வார்த்தையை வைத்துக்கொன்டு திரைக்கதையில் எப்படியெல்லாம் விளையாடியிருக்கலாம், மொத்தமாய் தவறவிட்டு வழக்கமான, பழக்கமான ஒரு திரைக்கதையையே தந்திருக்கிறார் முருகதாஸ்.

எம்.ஜி.ஆருக்கு அவரின் அரசியல் பயணத்தை நாடோடி மன்னன் தீர்மானித்தது; ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை சொல்லும் விதமாக முத்துவின் வசனங்கள் அமைந்தன. சர்கார் விஜயின் அரசியல் கிராஃபுக்கு எந்தளவுக்கு உதவும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

மொத்தத்தில், லாஜிக் மீறல்கள் தூக்கலாகவும் சுவாரஸ்யங்கள் குறைவாகவும் இருந்தாலும் படம் பார்க்கும் சாமானியனை பல இடங்களில் கனெக்ட் செய்யும்விதத்திலும் ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொன்னவிதத்திலும் `சர்கார்' மெஜாரிட்டிக்கு அருகில் வருகிறது!




தடுத்து நிறுத்திய சிவாஜி!

Published : 02 Nov 2018 11:27 IST
 


பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக ஜொலிக்க முடியும் என்பதுதான் 40-களின் தமிழ் சினிமாவில் நியதியாக இருந்தது. அதை உடைத்தெறிந்து, வசன உச்சரிப்பாலும், தன்னுடைய உடல்மொழி சார்ந்த நடிப்புத் திறத்தினாலும் விதவிதமான கதாபாத்திர பரிணாமங்களாலும், மக்களைத் தன்வசம் இழுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

“தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு பிறந்தது. ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் அவர் அமரிக்காவில் பிறக்காதது” என்றார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அப்படிப்பட்ட ஒரு கலைஞரோடு பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றது எனது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனைச் சந்தித்தேன். அப்போது அவர், “ நான் சிவாஜிக்காக ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’ படத்தில் மிருதங்கம் வாசித்தேன். அந்தப் படம் வெளியான பிறகு, ‘சில இடங்களில் சிவாஜி அளவுக்கு உங்கள் வாசிப்பு இல்லை’ என்று பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்” என்றார். எந்த அளவுக்குச் சிறப்பான நடிப்பைச் சிவாஜி வெளிப்படுத்தியிருந்தால், புகழ்பெற்ற தொழில்முறை வித்வானின் இயல்பான வாசிப்பைக்கூட இப்படி விமர்சிக்கத் தோன்றியிருக்கும்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி நடிகர் திலகம் சிவாஜி 1988-ம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கினார். ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற அந்தக் கட்சியின் தலைமை அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவருடைய நேரம் தவறாமை எனும் உயர்ந்த பண்பு, அரசியலிலும் தொடர்ந்தது. பொதுவாக எந்தக் கட்சிப் பொதுக் கூட்டம் என்றாலும் மாலை 6 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தால், 7.30-க்குத்தான் தொடங்கும். முக்கியத் தலைவர்கள் 8 மணிக்கு மேல்தான் வருவார்கள். சிவாஜியோ கூட்டம் மாலை 6 மணி என்று போட்டிருந்தால் துல்லியமாகக் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மேடையில் இருப்பார். “ கட்சி மீட்டிங்கை சீக்கிரம் நடத்தி முடித்தால்தானே கூட்டத்துக்கு வருபவர்கள் சீக்கிரம் வீடு போய்ச்சேர முடியும்’’ என்பார்.

படப்பிடிப்பின்போது சிவாஜியைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருப்பார். ஆம்... பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும். அருகில் உதவியாளர் அடுத்த காட்சிக்கான வசனங்களைப் படித்துக் காண்பித்துக் கொண்டிருப்பார்; அப்போது இயக்குநர் ‘டேக் ரெடி’ என்று கூறியவுடன், சிங்கம் போல எழுந்துவந்து, காட்சியை ஒரே டேக்கில் நடித்துக் கொடுப்பார். நான் சொல்லும் இச்சம்பவங்கள் நடைபெறும்போது சிவாஜி 60 வயதில் இருந்தார்.

கட்சி அலுவலகத்துக்குச் சில ரசிகர்கள் தினந்தோறும் வருவார்கள். அப்போது ஒன்றிரண்டு பேரைத் தினமும் கட்சி அலுவலகத்தில் பார்த்த சிவாஜி, அவர்களைக் கூப்பிட்டு, “ஏதும் வேலை பார்க்கவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “இன்று விடுமுறை தலைவரே, அது இது” என்று மழுப்பினார்கள்.

அவர்களிடம், “என்னுடைய ரசிகர்கள் யாரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு, ரசிகர் மன்றப் பணியோ கட்சிப் பணியோ செய்ய வரக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறினார். அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடையுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்தால், “தொழிலைக் கவனிக்காமல், இங்கு என்ன வேலை ” என்று அக்கறையுடன் துரத்துவார்.

ஒரு சமயம் சென்னை, சூளைப் பகுதியில், கட்சிப் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. ‘சிவாஜி’ கிருஷ்ணமூர்த்தி என்ற பேச்சாளர் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு நிமிடம்தான் பேச்சைக் கேட்டார், சிவாஜியின் முகம் வீரபாண்டிய கட்டபொம்மனைப் போலக் கோபத்தில் சிவந்தது. அவசரமாக எழுந்து சென்று அந்தப் பேச்சாளரின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தொடர்ந்து பேசாதபடி தடுத்து உட்கார வைத்துவிட்டார்.

தொகுப்பு: கே. சந்திரசேகரன்,

தலைவர் - நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை
திரை வெளிச்சம்: கத்தி போச்சு சர்கார் வந்தது

Published : 02 Nov 2018 11:28 IST

செல்லப்பா

 

தமிழ்த் திரையுலகில் கதைக் கையாடல் என்பது தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தின் கதை தமது என்று கூறிப் பத்துப் பேர் வந்ததாகவும், ‘பத்துப் பேருக்குத் தோன்றிய கரு தனக்குத் தோன்றியிருக்காதா’ என்று இயக்குநர் ஸ்ரீதர் கூறியதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ படத்தில் கி.ராஜநாராயணின் ‘கோபல்லபுரம் கிராமம்’ நாவலின் சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் பலரறிந்தது. கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதை தன்னுடையது என என்.ஆர்.தாசன் என்பவர் வழக்குப் போட்டு வெற்றிபெற்றதாகத் தெரிகிறது.

பிரபல ஹாலிவுட் படமான சைக்கோவைத் தழுவியே பாலுமகேந்திரா ‘மூடுபனி’ படத்தை எடுத்தார் என்போர் உண்டு. இயக்குநர் மணிரத்னத்தின் ‘நாயகன்’ கதை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

‘கறுப்புப்பணம்’ என்ற படமே ‘ஜென்டில் மேன்’ ஆனதும், ‘நாம் பிறந்த மண்’, ‘இந்தியன்’ ஆனதும் இயக்குநர் ஷங்கரின் திறமைக்குச் சான்றுகள். நடிகர் கமல்ஹாசனின் கதை சாமர்த்தியம் குறித்து ‘ஹே ராம்’ என்று சொல்லத்தக்க அளவில் பதிவுகள் காணக் கிடைக்கின்றன.

அட்லி, விஜய் போன்ற சமகால இயக்குநர்கள் எவ்வளவு திறமையாகக் கதைகளைத் தேடி உருவாக்குவார்கள் என்பதை விவரிக்கவே தேவையில்லை. ஆக, காலங்காலமாக நிகழ்ந்துவரும் பண்பாட்டு நிகழ்வுபோல் இந்தக் கதை விவகாரம் தொடர்ந்துவருகிறது. பெரிய நடிகர், அதிக பட்ஜெட் எனும்போது அதற்கு ஊடக வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கிறது.

செங்கோலும் சர்காரும்

அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படக் கதை தொடர்பாகவும் இதே போன்று பேச்சு எழுந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களையே தருவதால் இயக்குநர் முருகதாஸ் படம் ஒன்றைத் தொடங்கினாலே யாருடைய கதையை அவர் படமாக்குகிறார் என்பதிலேயே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பட்ட காலிலே படும் என்பதுபோல், முருகதாஸுக்கும் நிகழ்கிறது. அவரது ‘ரமணா’ தொடங்கி ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘கத்தி’ எனத் தொடர்ந்து இப்போது ‘சர்கார்’ வரை அவரைப் போன்றே ஒத்த சிந்தனையுடன் பலரும் யோசித்துக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். இதில் முத்தாய்ப்பு கிறிஸ்டோபர் நோலன்தான்.

‘சர்கார்’ பட முன்னோட்டக் காட்சிகள் வெளியானதும் அதைப் பார்த்த வருண் ராஜேந்திரன் என்னும் உதவி இயக்குநர், தான் 2007-ம் ஆண்டில் பதிவுசெய்திருந்த தனது ‘செங்கோல்’ கதையைப் போலவே அதுவும் இருந்ததும் பதறிப்போயுள்ளார்.

வருண் உடனடியாகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார். அதன் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ், விசாரித்து அறிந்ததில் வருண் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்ததால், முருகதாஸை அழைத்து விசாரித்திருக்கிறார். ஆனால், முருகதாஸ் ‘சர்கார்’ தனது கதைதான் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

எந்தச் சமரசத்துக்கும் தயாரில்லை என்றும் மீதியை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து வெளியேறியிருக்கிறார். வேறுவழியற்ற சூழலில் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துபேசி எடுத்த முடிவின்படி, வருணின் கதைக்கும் முருகதாஸின் கதைக்கும் இடையே ஒத்த சாராம்சம் இருப்பதை ஒத்துக்கொண்டு அவருக்குத் தங்களால் உதவ இயலவில்லை என்பதற்காக வருத்தமும் தெரிவித்துக் கடிதம் ஒன்றை வருணிடம் கொடுத்துவிட்டார்.

அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானவுடன் விஷயம் எல்லாத் திக்கிலும் பரவிவிட்டது. சமூக வலைத்தளங்களில் முருகதாஸ் கடுங்கேலிக்கு ஆளானார். தன் கதைதான் ‘சர்கார்’ என்பதை முருகதாஸே மறந்துவிடக்கூடிய அளவுக்கு நிலைமை முற்றியது.

ஜெயமோகனும் சர்காரும்

ஆனாலும், விடாப்பிடியாக நின்ற முருகதாஸ் தன் கதைதான் ‘சர்கார்’ எனச் சாதித்தார். தனது முழுக்கதையை பாக்யராஜ் படித்துப் பார்க்காமல், ஒருதலைப் பட்சமாகத் தனக்குத் தண்டனை அளித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பாக்யராஜும் தன் தரப்பின் நியாயத்தைத் தெரிவித்து ஊடகங்களில் பேசினார். இதனிடையே ‘சர்கார்’ படத்தில் பணியாற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இது முருகதாஸின் கதைதான் என்றும் தானும் முருகதாஸும் அவருடைய உதவியாளர்களும் கடுமையாக உழைத்து உருவாக்கிய கதை இது என்றும் எதற்கும் அஞ்சாமல் தனது இணையதளத்தில் எழுதினார்.

ஆனால், புரியாத புதிராக அடுத்த நாளே நீதிமன்றத்தில் வருண், ஏ.ஆர்.முருகதாஸ் இடையே சமரசம் ஏற்பட்டது. தன்னைப் போலவே சிந்தித்த வருணின் சிந்தனைக்கு மதிப்புக் கொடுக்கத் தயாரானார் முருகதாஸ். படத்தின் டைட்டில் கார்டில் வருணை அங்கீகரித்து நன்றி தெரிவிப்பதாகக் கூறிய முருகதாஸ், ‘சர்கார்’ தனது கதை தான் என்பதை மட்டும் மீண்டும் வலியுறுத்தினார். சமரசத்துக்குப்பின் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த வருண், ‘விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது தீபாவளிப் பரிசே சர்கார்’ என்பதையும் தெரிவித்து முடித்தார்.

‘சர்கார்’ கதை சர்ச்சையைப் பொறுத்த விஷயத்தில், எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான பாக்யராஜ் நியாயமாகவும் துணிச்சலாகவும் நடந்துகொண்டார் எனப் பலதரப்பிலிருந்தும் பாராட்டுக் கிடைத்தது. அதே நேரத்தில் ஜெயமோகன் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் கிண்டலடிக்கப்பட்டார்.

தனது இணையதளத்தில் படத்தின் தலைப்பைக்கூட சர்க்கார் என்று பிழையாகக் குறிப்பிட்டிருந்த அவர், வருணுக்கு அங்கீகாரம் கிடைத்ததற்குப் பின்னர், அதைக் கேரளத்தின் நோக்குக்கூலிக்கு ஒப்பிட்டு எழுதிய தன்மை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்ற இயக்குநர் பிரவீன் காந்தி, ஜெயமோகன் இந்தச் சொல்லை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அடுத்த நாள் தனது வாக்கியத்தைச் சற்றே மாற்றிய ஜெயமோகன் நோக்குக்கூலி என்பதையும் எடுத்துவிட்டார்.

ஜெயமோகனின் இப்படியான போக்கு பலருக்கும் பேரிடியாக இருந்தது. திரைத் துறையைப் பொறுத்தவரை ஜெயமோகன் சாதாரண மனிதர். ஒரு எழுத்தாளர் என்ற அளவில் அவருடைய எந்தச் சொல்லுக்கும் அங்கே பெரிய மதிப்பிருக்காது. அதை உணர்ந்ததால்தான் அவர் இந்த விஷயத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் தரப்புக்கு ஆதரவாகவே நின்று அவரை வலுப்படுத்துவதில் தன் பலத்தை வெளிப்படுத்தி இருக்கக்கூடும் என்கிறார்கள் திரைத் துறையையும் இலக்கியத்தையும் அறிந்தவர்கள்.

இனி வரும் காலத்தில் எழுத்தாளர்களுக்குக் கொடுமை நிகழாவண்ணம் தடுப்பதற்காகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தனது விதிகளை மாற்றியமைக்கும் என்றும் எழுத்தாளர்களுக்கு நியாயம் கிடைக்க சங்கம் துணை நிற்கும் என்றும் பாக்யராஜ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

படமெடுக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே கதை தொடர்பாகத் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது பயன் தரும் என்றும் பலர் தெரிவித்திருக்கிறார்கள். எவ்வளவோ முதல் போட்டுப் படமெடுக்கும் திரைப்பட உலகினர், உதவி இயக்குநர்களின் கதையை அவர்களிடம் அனுமதி பெற்றுப் படமாக்கினால், இதைப் போன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று ஆலோசனைகள் கூறப்படுகின்றன. சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் ஆர்வம் காட்டும் திரைத்துறையினர், அதைக் கடைப்பிடிப்பதிலும் ஆர்வம் காட்டுவது நல்லது என்கிறார்கள் விஷயமறிந்தோர்.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
இருமடங்கு சம்பளம்: மகிழ்ச்சியில் துள்ளிய ஊழியர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்
Published : 05 Nov 2018 18:25 IST

பிடிஐ





அமிர்தசரஸில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளமாக இரு மடங்கு ஊதியம் அளிக்கப்பட்டது. தீபாவளிப் பரிசு என்று எண்ணி மகிழ்ந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

இயந்திரக் கோளாறால் தவறுதலாக இரு மடங்குப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் அதை யாரும் எடுக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை மாவட்ட கருவூல அதிகாரி ஏ.கே.மைனி உறுதி செய்தார். ''அமிர்தசரஸில் மட்டுமல்ல, பஞ்சாப்பின் பெரும்பாலான அனைத்து அலுவலகங்களிலும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒரு மாத ஊதியம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

அமிர்தசரஸில் மட்டும் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை அதிகமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்றார் மைனி.

Tuesday, November 6, 2018

தேசிய செய்திகள்

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பொருள் போலியானது -ஆய்வில் தகவல்





ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது

பதிவு: நவம்பர் 05, 2018 12:51 PM

பெங்களூரு

ஆனலைன் விற்பனையில் ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக உள்ளது என கூறப்படுகிறது இதில் அதிக்மமானவை ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும்.

ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நறுமண மற்றும் ஒப்பனை பொருட்கள் 35 சதவீதம் போலியானவை என்றும் 22 சதவீதம் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் என்றும், 5 சதவீதம் பைகள் ஆகியவை தான் போலியானவையாக இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது போலியான பொருட்களை வழங்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தீபாவளியின் வரலாறு!


இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறியவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் இங்கு கொண்டு வந்தனர்.
அதில் ஒன்று தீபாவளி கொண்டாட்டம்.

1929ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தீபாவளி அதிகாரபூர்வப் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிராங்கூன், சிலிகி, ரோச்சர் வட்டாரங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கின.
1985 ஆம் ஆண்டு லிட்டில் இந்தியா - சிராங்கூன் வட்டாரத்தில் ஒளியூட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற ஆரம்பித்தன. அதைக் காண்பதற்காகவே சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதுண்டு.


2002ஆம் ஆண்டிலிருந்து தீபாவளியை முன்னிட்டு எஸ்பிளனேட் - கடலோரக் கலையரங்குகளில் கலா உற்சவம் எனும் இந்தியக் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்று வருகிறது. ஆடல், பாடல், கதை சொல்லும் நிகழ்ச்சி என பல்வேறு அங்கங்கள் அதில் இடம்பெறும். அந்நிகழ்ச்சிகளைக் காண ஆண்டுதோறும் சுமார் 40,000 பார்வையாளர்கள் கூடுவர்.

தீபாவளியை முன்னிட்டு வியக்கவைக்கும் 8 சலுகைகளை அறிவித்த ஜியோ.! உடனே முந்துங்கள்.!


ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மட்டும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இந்த சிறப்பு சலுகைகளை பல்வேறு

மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தீபாவளி பரிசாக Diwali Dhamaka என்னும் பெயரில் தான் இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 100 சதவீதம் கேஷ்பேக் பரிசு பின்பு போன் பரிசு என பல சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.

சலுகை-1:
ஜியோ ரூ.1699 வருடாந்திர திட்டம்: இந்த சிறப்பு வருடாந்திர திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் குரல் அழைப்புகளை பெற முடியும்.


 சலுகை-2:
100 சதவீதம் கேஷ்பேக்: ரூ.149 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில் முழு பணமும் திரும்பியளிக்கப்படும்.


 சலுகை-3
ரூ.2200 உடனடி கேஷ்பேக்: மை ஜியோ ஆப் மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களுக்கு 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் ரூ.2200-வரை பணம் திரும்பியளிக்கப்படும்.


 சலுகை-4:
வேலட் ஆஃபர்: ஜியோவுடன் கூட்டு வைத்திருக்கும் பிரபல ஆன்லைன் வேலட் நிறுவனங்களுடன் ரீசார்ஜ் செய்கையில் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.300 வரை பணம் திரும்பப்பெருவர்.


 சலுகை-5:
ஜியோ கிப்ட் கார்ட்: ரூ.1095 மதிப்பிளான ஜியோபோன் கிப்ட் கார்ட் ஆனது, 6 மாதகாலத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பு வசதிஇ டேட்டா வசதி மற்றும் ஜியோபோனை வழங்குகிறது.


 சலுகை-6:
ஜியோபோன் 2: ரூ.2999 மதிப்பில் ஜியோபோன் 2 மற்றும் ரூ.200 வரையிலான கேஷ்பேக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.


 சலுகை-7:
மடிக்கணினிகளை வாங்கும் பயனாளர்கள்jioFi மற்றும் ரூ 3,000 ரூ 3,000 மதிப்புள்ள தரவு சலுகைகளை பெறுமுடியும்.


 சலுகை-8:
எல்ஜி ஸ்மார்ட் டிவி வாங்கும் வாடிக்கையாளர்கள் JioFi மற்றும் ரூ 2,000 மதிப்புள்ள தரவு நன்மைகளை பெறமுடியும்.
 
தீபாவளி மது விற்பனை ரூ.350 கோடிக்கு இலக்கு: தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையால் எதிர்பார்ப்பு

Published : 05 Nov 2018 15:41 IST

சென்னை
 


மதுவிற்பனை - கோப்புப் படம்

தமிழகத்தில் மதுபான விற்பனைக்கு ரூ.350 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் விற்பனை காரணமாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.80 கோடி அளவிலும், ஆண்டுக்கு சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி அளவிலும் வருவாய் கிடைக்கிறது. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு நிர்ணயிப்பது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி ரூ.350 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனைத்து மதுபானக் கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் தீபாவளி நாளன்று மட்டும் ரூ.150 கோடி மது விற்பனையாகும் அதே அளவு இந்த ஆண்டும் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்து வருவதும், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருவதும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை வரும். இந்தமுறை 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் மது விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாளிலும் ரூ.245 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மதுவுக்கு எதிரான தீவிரப் போராட்டம் காரணமாக 20 சதவிகிதம் தீபாவளி விற்பனை குறைந்து, ரூ.223 கோடி அளவிற்கே விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக மது விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளிக்கு மது விற்பனை குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மதுவிலக்குப் போராட்டத்தில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, “மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது.

தீபாவளிப் பண்டிகை வருகிறது. இந்தப் பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? மாதம் தோறும் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு மது விற்பனை செய்வது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தது. இதேபோன்ற நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது.
நெல்லை, கும்பகோணத்தில் மர்ம காய்ச்சலில் 3 பேர் மரணம்

Published : 06 Nov 2018 08:11 IST




டெங்கு காய்ச்சல் - கோப்புப்படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், கும்பகோணத்தில் ஒரு பெண்ணும் நேற்று உயிரிழந்தனர்.

திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி அமலி பிச்சுமணி(55). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(47) என்பவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறியும் பரிசோதனை வசதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலும் உள்ளன. இம்மாவட்டத்தில் வேறு இடங்களில் இந்த வசதி இல்லை. 2 பேர் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.கும்பகோணம்கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை சோழன் நகரைச் சேர்ந்தவர் திருமாவளவன். இவரது மனைவி சிவரஞ்சனி(36). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து, கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனி உயிரிழந்தார்.
இவர்களுக்கு தீபாவளி இல்லையா?

Published : 06 Nov 2018 08:30 IST

புது டெல்லி
 



பொதுவாக டி.வி.யில் விளம்பரங்கள் தோன்றும்போது நாம் பெரும்பாலும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவோம். ஆனால் வெகு அபூர்வமாக சில விளம்பரங்கள் நமது மனதை வெகுவாக பாதித்துவிடும்.

அந்த வகையில் ஹியூலெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனம் தனது பிரிண்டரை பிரபலப்படுத்த தயாரித்துள்ள விளம்பர படம் நிச்சயம் அனைவரைது நெஞ்சையும் உலுக்கிவிடும்.

ஒரு வட இந்திய பெண்மணி, சாலையோரம் அகல் விளக்குகள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார். அந்த வழியாக செல்வோர் பலரும் அவரை பார்த்தபடியே சென்று கொண்டிருப்பர்.

மார்கெட்டிற்கு தனது தாயுடன் வந்த சிறுவன், தனது அம்மாவிடம் அகல் விளக்கு வாங்கலாமா? என்பான், ஆனால் அவனது தாய் அவனை இழுத்துச் சென்றுவிடுவார். அவன் ஓடி வந்து சில அகல் விளக்குகளை அவரிடம் வாங்கி, ``இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா'' என்று கூறுவான். அதற்கு அந்த பெண்ணோ, எங்களுக்கு ஏது தீபாவளி, இவ்வளவு அகல் விளக்குகளும் விற்பனையானால்தான் எங்களுடைய வீடுகளில் விளக்கு எரியும் என்பார்.

உடனே தன்னிடம் உள்ள போனில் அவரை புகைப்படம் எடுப்பான். அவரும் கவலை தோய்ந்த முகத்துடன் போஸ் கொடுப்பார்.

வீட்டிற்கு வந்த அந்த சிறுவனோ தான் எடுத்த புகைப்படத்தை கம்ப்யூட்டரில் பெரிதுபடுத்தி, அத்துடன் ``இனிய தீபாவளி, அம்மாவின் தீபாவளி'' என்ற வாசகத்துடன் அவர் அமர்ந்திருக்கும் மார்கெட் பகுதி முகவரியைப் போட்டு, இங்கு அகல் விளக்குகள் கிடைக்கும் என்ற செய்தியோடு பிரிண்ட் எடுப்பான். பல பிரிண்ட் எடுத்து சைக்கிளில் சில வீடுகளுக்கும், கடை களுக்கு வருவோர் போவோருக்கும் விநி யோகிப்பான்.

அடுத்த சில மணி நேரங்களில் பலரும் வந்து அகல் விளக்குகளை வாங்கிச் செல்வர்.

இரவு நேரம் வரும்போது அந்த சிறுவன் மீண்டும் வந்து அகல் விளக்கு விற்பனை செய்த அந்த பெண்மணியிடம் , அகல் விளக்கு இருக்கிறதா என்று கேட்பான். அவரோ எல்லாம் விற்பனையாகிவிட்டது என்பார். நான்தான் காலையில் சொன்னேனே, இரவிற்குள் அனைத்தும் விற்றுவிடும் என்று கூறியபடி சைக்கிளில் செல்வான். கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவர் திரும்பிப் பார்க்கும்போது அவன் செல்வது மட்டும் தெரியும். ஓடிச் செல்ல அவர் முயலும்போது, அந்த சிறுவன் எடுத்த பிரிண்ட் நகல் ஒன்று அவர் காலில் தட்டுப்படும். அதை எடுத்துப் பார்க்கும்போதுதான் சிறுவனின் முயற்சி புரியும். இவர்களுக்கு தீபாவளி கிடையாதா, சாலையோர வியாபாரிகளையும் கவனியுங்கள் என்பதாக வாசகம் இருக்கும்.

நான்கு நாளில் இந்த வீடியோவை 23 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்க்கும் முன்பு கையில் கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள் என்ற தலைப்பில் வெளியான செய்தி பொய்யல்ல உண்மை என்பது இதைப் பார்த்த பிறகு நீங்களும் உணர்வீர்கள்.

பெரிய கடைகளை நோக்கி படையெடுக்கும் உங்களைப் போன்ற பலரையும் இனி சாலையோர வியாபாரிகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மண்ணின் மனிதர்களுக்காக பன்னாட்டு நிறுவனம் எடுத்த விளம்பரப் படம்.

குழந்தைகள் பட்டாசு வெடித்தால் தந்தை மீது வழக்கு

By DIN | Published on : 06th November 2018 01:15 AM |

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

இதை மீறி பட்டாசுகள் வெடிப்பதைத் தடுக்க காவல் துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகள் பட்டாசுகளை வெடித்தால் அந்தக் குழந்தையின் தந்தை மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடித்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது குடித்தால் பரிசு: விளம்பரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள் கைது

By DIN | Published on : 06th November 2018 02:48 AM |

திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது குடித்தால் பரிசு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி, பல்வேறு தனியார் நிறுவனத்தினர் தங்களது விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் கவர்ச்சியான விளம்பரங்களையும், சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது வழக்கம்.

ஆனால், திருவல்லிக்கேணி வல்லபா அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலின் நிர்வாகத்தினர், தீபாவளியையொட்டி ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 இன்ச் கலர் டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மிஷின் வழங்கப்படும் என்றும், மது அருந்துவோருக்கு தின்பண்டங்கள் இலவசம் என விளம்பரம் செய்திருந்தது.
இதுதொடர்பாக ஹோட்டல் முன்பு ஒரு பெரிய விளம்பர பதாகையும் வைக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடம் விளம்பரமும் செய்தது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜாம் பஜார் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தனர்.
இருவர் கைது: அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், ஹோட்டல் உரிமையாளர் முகமது அலி ஜின்னா, மதுபானக் கூட மேலாளர் வின்சென்ட் ராஜ் (25), மதுபான கூட ஊழியர் ரியாஸ் அகமது (41) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் வின்சென்ட் ராஜ், ரியாஸ் அகமது ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். முகமது அலிஜின்னா முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலராகவும், தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் நல்லவரானால்...

By அருணன் கபிலன்

| Published on : 05th November 2018 02:31 AM |

திருமணத்துக்கு வெளியில் உறவில் இருப்பது குற்றமல்ல என்று அண்மையில் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருப்பது பலருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒழுக்கத்திலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பெருந்தீங்கை ஏற்படுத்தும் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.

காலந்தோறும் அறங்கள் புதுப்பிக்கப் பெறுகின்றன. பழைமையில் பிடிப்புள்ளவர்கள், புதுமையை விரும்புகிறவர்கள், பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் தத்தளிப்பவர்கள் என்று குழம்பிக் குழம்பித்தான் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. நவீனயுக விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சி, பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்ட இயந்திர வாழ்வு என்று பல சிக்கல்களுக்குப் பின்னால் பழைய அறமாகிய இல்லறமும் துறவறமும் சிக்கிக் கொண்டு அல்லற்படுகிறது.


ஒருவர் மட்டுமே தனித்து வாழும் துறவறம், ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழும் இல்லறம் என்னும் இவற்றிற்கு மாறாக ஒரு பாலினத்தைச் சேர்ந்தவரே இணைந்து வாழும் புதியதொரு நல்லறம் (?) அண்மையில்தான் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே இந்தத் தீர்ப்பும் வந்திருப்பதை உற்று நோக்க வேண்டும். இதுவும் ஒரு புதிய அறமாகவும் இருக்கலாம்.

குடும்ப வாழ்வில் ஆணுக்கு இருக்கிற உரிமையும் சமத்துவமும் பெண்களுக்கு இன்றைக்கு இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. ஆனபோதும் அன்றைய காலத்திலிருந்தே பெண்ணை விட ஆணின் ஒழுக்கத்தையே பெரிதென்று வலியுறுத்தித் தமிழ் இலக்கியங்கள் தொடர்ந்து சுட்டி வந்திருக்கின்றன.

தன் கணவன் கள்வன் என்ற கொடுஞ்சொல் கேட்டவுடன் வெகுண்டெழுந்து அரசவை சென்று எரிமலைபோலப் பொங்கி வாதாடித் தக்க சான்றுகளைக் கொண்டு நிறுவி, அரசனே உயிர் துறந்தும் போதாது, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை உலகறிய வேண்டும் என்பதற்காக மதுரையை எரியூட்டினாளே தாய் கண்ணகி. அவள் தனது கணவனாகிய கோவலன் தன்னைப் பிரிந்துவிட்டு நாட்டிய மங்கையாகிய மாதவியோடு இன்புற்றிருந்தபோது எந்த அரசவைக்கும் போகவில்லை. தன் தாய் தந்தையிடத்தோ, தன் கணவனான கோவலனின் தாய் தந்தையிடத்தோ கூடப் புகார் கூறவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூகம் குறிப்பிடுகிற, பெண்களுக்கே ஏற்படுகிற இன்னலின் விளைவிது என்று கூறி அவளது தோழி தேவந்தி அதற்குப் பரிகாரமாகப் புகார் நகரத்துக்கு அருகிலிருக்கும் சோம குண்டத்திலும் சூரிய குண்டத்திலும் மூழ்கியெழுந்து காமவேளைத் தொழுதால் இந்த இன்னல் தீரும் என்று அறிவுறுத்திய வேளையில், தாய் கண்ணகி அன்றே தானே நீதிபதியாகி இந்தத் தீர்ப்பினைக் கூறிவிட்டாள். தனது தோழியின் அறிவுரைக்குக் கண்ணகி தந்த பதில் "பீடன்று' என்பதுதான். அப்படிச் செய்வது எனக்குப் பெருமையில்லை என்று தன்னை தெய்வப் பெண்ணாக்கிக் கொண்டு அவள் கூறினாள்.

ஆனால் கோவலன் திரும்பி வந்து மதுரைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் தனிமையில் அவன் வருந்துவதைக் கண்டு, துணிந்து "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்' என்று இடித்துரைக்கவும் தவறவில்லை.

தாய் கண்ணகி பெண்குலத்திற்கு வழிகாட்டுகிறாள். ஆணாகிய கோவலனுக்கும் பெண்ணாகிய தனக்கும் உள்ள ஆழ்உறவுப் பிரச்னைகளை அடுத்தவரிடத்துச் சொல்ல வேண்டியதில்லை (கடவுளிடமும் கூட) என்பதே கண்ணகி மேற்கொண்டிருக்கிற நியதி.

கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இருகட்சிக்கும் அதைப் பொதுவில் வைக்கும் வழக்கம் இன்றைக்கும் வரவில்லை. ஆனால் அன்றே அப்படிப் பாடிய பாரதியார் மேலும் சில கருத்துகளையும் பெண் விடுதலை குறித்து முன்வைத்திருப்பதை இங்கு எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால், 1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது. 2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. 3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது. 4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. 5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். 6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்.

7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். 8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.

சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் அன்னி பெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக் கூடாது. இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப் படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்' என்று உறுதி கூறுகிறார் பாரதியார்.
இதையெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைக்குச் சாத்தியமா என்னும் கேள்வி எழலாம். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் குடும்ப உறவினைக் கடந்து வெளியுறவில் ஈடுபடுகிற ஒரு மனைவியின் கணவனாக - ஓர் ஆணாக எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்?

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
என்பது ஒளவை வாக்கு.

திசையறியாப் பறவைகள்

By வாதூலன் | Published on : 06th November 2018 01:24 AM 

சில மாதங்களாக நாட்டில் நிகழும் சம்பவங்களைப் பார்க்கும்போது இது போன்ற குழப்பமான சூழல் இதற்குமுன் எப்போதுமே இருந்ததில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, பஞ்சாபில் நடந்த ரயில் விபத்து. ஏடுகளில் விவரமாகப் படித்துமே, இது அந்த ஊர் உள்ளாட்சி அமைப்பின் அலட்சியம் என்று தெளிவாகத் தெரிகிறது. தசரா பண்டிகையில் நடைபெறும் ராவண விழாவுக்காக, இரவு வேளையில் பொதுமக்கள் கோஷமிட்டுக் கொண்டு போகிறார்கள். ஒரு சில பிரபல அரசியல்வாதிகளால் விழாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்தது. விழா கூச்சலில் மின்சார ரயில் வருவதைக் கவனிக்காததால் கொடூர விபத்து நேர்ந்திருக்கிறது.

மின்சார ரயில், நாலு சக்கர வாகனம் போலவோ, லாரி போலவோ அல்ல உடனே பிரேக் போட்டு நிறுத்த. காவல் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது இந்த விழா. இந்த விபத்துக்கு மத்திய அரசையும் பிரதமரையும் குற்றம் சாட்டுவானேன்?

அனைவரும் அறிந்த சபரிமலை விவகாரத்தில் பெண்ணுரிமை பேசும் முற்போக்காளர்கள் வரம்பு மீறித்தான் செல்கிறார்கள். அதற்காக வேற்று மதம் சார்ந்த இல்லத்தில் தாக்குதல் செய்தது சரியில்லைதான். ஆனால் வெறும் வீம்புக்காக பிரச்னையை கிளப்பியதே முற்போக்கு வாதிகள்தானே? இதில் கேரள காங்கிரஸின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கும் தோழன், பா.ஜ.க.வுக்கும் எதிரி என்ற முரணான நிலைப்பாடு.
வட இந்தியாவில் நடக்கவிருக்கும் மாநிலத் தேர்தல்கள், அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இங்கே, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரின் கருத்தைக் குறிப்பிடலாம். இந்தியாவின் மிக முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில கட்சிகள் தங்கள் மாநிலப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று குறைபடவும் செய்கிறார்.

உண்மை என்னவென்றால் பல மாநிலத் தலைவர்களுக்கு, தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டிருக்கிறது. மம்தா பானர்ஜி மதில் மேல் பூனையாக இருக்கிறார். மாயாவதியின் நிலைப்பாடும் இது மாதிரிதான். ஒன்றிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்து, மத்திய அரசுடன் நட்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான நிதி பெறுவதில் சந்திரபாபு நாயுடு வல்லவராயிருந்தார். இப்போது அவருக்கு தன்முனைப்பு மேலோங்கி, மத்திய அரசுடன் மோதுகிறார். காங்கிரஸை உதறிவிட்டுத் தனியாக நிற்க முற்படும் சந்திரசேகர ராவிடம் எங்களுடன் இணையுங்கள் என்று வீரப்ப மொய்லி கெஞ்சுகிறார்.

தமிழ்நாட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏற்கெனவே லஞ்ச ஊழலாலும், கோயில் சிலை திருட்டாலும் பெயர் கெட்டுப்போன மாநிலத்தை, இப்போது டெங்கு காய்ச்சலும், பன்றிக் காய்ச்சலும் அச்சுறுத்துகின்றன. இதில் வேதனை என்னவென்றால், அரசு அதிகாரிதான் அறிக்கை விட்டுக் கொண்டேயிருக்கிறாரே தவிர, எந்த அமைச்சரும் பொறுப்பான பதில் தருவதில்லை.

தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் போக்கும் இரை தேடும் பறவைகளைத்தான் ஞாபகப் படுத்துகின்றன. அதோடு ஒருநாளும் இல்லாத திருநாளாக ராகுல் காந்தி இந்து மதக் கோயில்களுக்கு திடீரென விஜயம் செய்கிறார்.

பாஜகவின் செயல்பாடும் அத்தனை போற்றத்தக்கதாக இல்லை என்றே கூற வேண்டும். ரஃபேல் ஊழல் வழக்கு, சிபிஐ அதிகாரிகள் மோதல் இவற்றுடன், ரிசர்வ் வங்கி கவர்னருடன் மனக்கசப்பு என்று புதிதாக ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. மிக முக்கியமான பிரச்னைகளில் மௌனம் சாதிக்கும் பிரதமர், குஜராத்தில் வல்லபபாய் படேல் சிலையைத் திறந்து வைத்துப் பெருமிதம் அடைகிறார்.

சுதந்திரத்துக்கு முன் பிறந்த அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, இரும்பு மனிதரான படேலுடன் நேருவுக்கு பனிப்போர் நிலவியது. மற்றொன்று, சுபாஷ் சந்திர போஸின் மரணத்தில் மர்மம் இருந்தது. இவ்விரண்டு தலைவர்களுக்கும் காங்கிரஸ் உரிய மதிப்பு தராமலிருந்திருக்கலாம், அதற்காக நேருவின் பங்களிப்பைக் குறைத்துப் பேசுவது முறைதானா?

தன்னிகரிலாத் தலைவராக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பிரதமராக நேரு ஆட்சி புரிந்தார். பல மாநிலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இன்றும் வெற்றிகரமாக இயங்கும் என்எல்ஸி, எச்ஏஎல் இவை இரு உதாரணங்கள்.

இங்கு வேறொன்றையும் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த நாளில் எங்கோ ஒரு மூலையில் நிகழும் தனிப்பட்ட கலவரங்களுக்குக் கூட அரசியல் சாயம் பூசி அரசியல் தலைவர்கள் சிலர் குளிர் காய்கிறார்கள். ஆனால் 1948-இல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது காந்தியைக் கொன்றது முஸ்லிம் அல்ல என்று ஒற்றை வரி அறிக்கையை விடுத்து அன்றைய பயங்கரமான சூழலை பெருமளவு நீர்த்துப் போகச் செய்தார் பண்டித நேரு என்பது வரலாறு.

இன்றைய அரசியல் போக்கைக் கவனித்தால், தேசியக் கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி திசை தெரியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தலைவர்கள் மனத்திலும் ஒரே கேள்விதான்: யாருடன் கூட்டு வைத்தால் வெற்றி? நிகழப் போகிற மாநிலத் தேர்தல்கள், மோதலோ, வன்முறையோ இல்லாமல், பொதுத் தேர்தலுக்கு ஒரு நல்ல முன்னோட்டமாக அமையும் என்று நம்புவோமாக.
'அரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி' உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Added : நவ 05, 2018 23:58

மதுரை'அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள் வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இது தொடர்பான, ஒரு வழக்கில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:கருணைப் பணி நியமனம் தொடர்பாக, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற, 2019 ஜன.,1 முதல் அமல்படுத்தும் வகையில், உடனடியாக தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள், சட்டப் பூர்வ வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும்.

நான்காம் நிலை ஊழியர்களைப் பொறுத்தவரை, கருணைப் பணியில் சில விதிகளைக்கூறி, புறக்கணிக்கக்கூடாது. விதிவிலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக, துப்புரவுப் பணியாளர் நியமனத்திற்கு போதிய தகுதிகள் அவசியம் இல்லை. எழுதப், படிக்க மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தால் போதும்.ஒரு ஊழியர் திடீரென இறக்கும்போது, அப்போது மனைவியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு, 18 வயது பூர்த்தியாகும்வரை, கருணைப் பணிக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டியதில்லை.பணிக்கு விண்ணப்பித்தபின், மூன்று மாதங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரி முடிவெடுக்க வேண்டும். தவறினால், அவரை முக்கியத்துவம் இல்லாத பணிக்கு மாற்ற வேண்டும்.இறந்தவரின் மனைவியைத் தவிர, மகன் அல்லது மகளுக்கு பணி வழங்கினால், அவர்களின் சம்பளத்தில், 25 சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வேலை கிடைத்ததும், தாயை கைவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, தாயை பாதுகாக்க,வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

பார்க்கும்திசையெல்லாம் தீப ஒளி பரவட்டும்

Added : நவ 06, 2018 06:17

கங்கா ஸ்நானம் ஆச்சா

பிரம்மாவின் வேதங்களை கவர்ந்த அசுரன் ஹிரண்யாட்சன் பாதாளலோகத்தில் ஒளிந்தான். அதை மீட்க பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் அவளுக்கு 'பவுமன்' என்பவன் பிறந்தான். பூமியின் பிள்ளை என்பது பொருள். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன் கெட்ட குணங்கள் மிக்கவனாக இருந்தான். இவன் 'நரகாசுரன்' என அழைக்கப்பட்டான்.

தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அவனை யாரும் தட்டிக் கேட்க வில்லை. இருப்பினும் அவனது அட்டூழியம் பொறுக்காமல் பெருமாளிடம் புகார் செய்தார் பிரம்மா. ஆனால் தன் தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான் நரகாசுரன். அப்போது சத்தியபாமாவாகப் பூமியில் வாழ்ந்தாள் பூமாதேவி. அவள் பகவான் கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். ஒரு கட்டத்தில் நரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையடைபவர் போல நடித்தார். பதறிப்போன பாமா தன் கணவரைக் காப்பாற்ற மகனான நரகாசுரன் மீது அம்பு தொடுக்கவே, அவன் இறந்தான். இறந்தவன் அசுரன் என்றாலும் மகன் என்பதால் பெற்ற வயிறு பதறியது. அதே நேரம் அவனது இறப்பை முன்னிட்டு மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் கேட்டாள். அந்நாளையே 'தீபாவளி' நன்னாளாக கொண்டாடுகிறோம். இந்நாளில் எண்ணெய்யில் மகாலட்சுமியும், நீரில் கங்கையும் வாசம் செய்வதால் தீபாவளி குளியலை ஒருவருக்கொருவர் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' எனக் கேட்பது வழக்கம்.

வரப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்

* நற்குணங்களின் இருப்பிடமே! கருணையின் விலாசமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குலத்தின் தவக்கொழுந்தே! மேகம் போல நீலவண்ணனே! கண்ணனே! மதுராநகர வாசியே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே! உன்னை வணங்குகிறேன்.* என் மனத் தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்தகோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால் கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! உன்னை வழிபடுகிறேன்.* கதம்ப மலரைக் காதில் குண்டலமாகத் தரித்தவனே! மிக அழகான கன்னங்களைக் கொண்டவனே! கோபிகைப் பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பைப் பொழிந்தவனே! வழிபடும் அடியவர்க்கு சுகம் தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்.* பூபாரத்தைப் போக்கியவனே! பிறப்பு, இறப்பு என்னும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெய்யை விரும்பித் திருடுபவனே! சாதுக்கள் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! கிருஷ்ணனே! உன்னைச் சரணடைகிறேன்.* இடைக்குலத்தின் திலகமாக திகழ்பவனே! ஆயர்குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தைத் துாண்டுபவனே! சூரியன் போல பிரகாசிப்பவனே! வேணுகானம் இசைப்பதில் வல்லவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரமருள்பவனே! கிருஷ்ணனே! உன்னைப்போற்றி மகிழ்கிறேன்.* ஆயர்பாடிக்கு அலங்காரமே! பாவங்களை போக்குபவனே! பக்தர்களின் மனதை மகிழ்விப்பவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில்தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! கோபியரிடம் விளையாடியவனே! கிருஷ்ணனே! உன்னை துதிக்கிறேன். உன்னருளால் உலகம் செழிப்புடன் வாழட்டும்.

தீபாவளியின் தம்பி யார் தெரியுமாஷசொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

பகவத் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்று குறிப்பிடுவது வழக்கம். தியாகத்தாய் சத்தியபாமா மகனை இழந்த நிலையில், பகவான் கிருஷ்ணரிடம் அந்நாளை பண்டிகையாக கொண்டாட வரம் பெற்றதால் 'பண்டிகைகளின் ராஜாவாக' தீபாவளி இருக்கிறது.தத்துவங்கள் பல இருந்தாலும் அதற்கெல்லாம் சிகரமாக இருப்பது பகவத்கீதை. தீபாவளி போல இதுவும் தியாகத்தின் பின்னணியில் உருவானதே. சாதாரணமாக தத்துவ உபதேசம் என்பது குருநாதர் தன் சீடர்களுக்கு செய்வதாக இருக்கும். ஆனால் கீதையோ நெருக்கடியான சூழலில் போர்க்களத்தில் பிறந்தது. எஜமானராக இருக்கும் அர்ஜுனன், வண்டிக்காரனாக தேரோட்டும் சாரதியிடம் கேட்ட உபதேசம். “சிஷ்யனாக சரணாகதி அடைந்த எனக்கு உபதேசம் செய்வாயாக” என அர்ஜுனன் கேட்ட போது பகவத்கீதை பிறந்தது. இதனால் கீதை 'தீபாவளியின் தம்பி' என்ற அந்தஸ்து பெறுகிறது. பண்டிகைகளில் ராஜா தீபாவளி போல் தத்துவங்களில் கீதை உயர்ந்ததாக உள்ளது. தீபாவளி, கீதைக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் பகவான் கிருஷ்ணரே.

நாளெல்லாம் நல்ல நாளே!

பண்டிகைகளில் அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டுமே. குடும்பத்திற்கு மட்டுமின்றி, உறவினர், நண்பர் வகையிலும் புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என தாராளமாக பணம் செலவாகும். இந்நாளில் பணத்திற்கு அதிபதியான குபேரலட்சுமியை வழிபட்டால் எல்லா நாளும் தீபாவளியாக இனிக்கும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியத்தை படைத்து 'ஓம் குபேராய நமஹ' 'ஓம் மகாலட்சுமியை நமஹ' என்னும் மந்திரங்களை 108 முறை ஜெபித்து மகாலட்சுமிக்கு தீபம் காட்ட வேண்டும்.

எல்லோரும் நலம் வாழ...

தீபாவளியன்று காலை, மாலை தீபம் ஏற்றும்போது,“கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!”என்ற ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.பொருள்: புழு, பறவை, மரம் எதுவானாலும், நீரிலும், நிலத்திலும் வாழும் ஜீவராசிகள் எதுவானாலும், மனிதர்களில் யாரானாலும், இந்த தீபத்தைப் பார்க்கும் அனைவரும் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும். பிறவிப்பிணி நீங்கி இன்பமாக வாழ வேண்டும். விளக்கேற்றும் புண்ணியபலனை உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆதிமனிதன் கொளுத்திய 'மத்தாப்பூ'

கங்கைக்கும் மேலான காவிரி

தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் பெருமையாகச் சொல்கிறோம். ஆனால் இந்த ஸ்நானத்தை உருவாக்கிய கிருஷ்ணரோ, தன் பாவம் தீர காவிரிக்கு கரைக்கு வந்தார். வீரனான நரகாசுரனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி தோஷம் உண்டானது. அவரது நீலமேனி வண்ணம் ஒளியிழந்து மங்கிப்போனது. அதை தீர்க்க கைலாயம் சென்று சிவனிடம் உபாயம் கேட்டார். “கிருஷ்ணா! துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயத்தில் இருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமிடம்) நேரத்திற்குள் காவிரியில் நீராடினால், வீரஹத்தி தோஷம் நீங்கும்” என்றார். கங்கா ஸ்நானத்திற்கு அருள் செய்த கிருஷ்ணர் தீபாவளியன்று காவிரியில் நீராடித் தன் பாவம் போக்கினார். இதனால் கங்கையை விட காவிரியும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பாரத நாட்டில் கடவுள் அருள் வேண்டி ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஆன்மிகப் பின்புலம், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உண்டு. நரகாசுரன் என்ற அரக்கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து உலக மக்களை காத்தருளிய நாளை தீபமேற்றி தீபாவளியாக கொண்டாடி வருகிறோம்.தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்திருநாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது தீ ஒளி என்று பொருள். வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி , வளம் பெருகும் என்பது ஐதீகம். தீய சக்திகளை விரட்டியதை மகிழ்ச்சியுடன் கொண்டாட, பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.காலையில் குளிச்சிட்டு, புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு, ருசியா நாலு பலகாரத்த சாப்பிட்டோமா, அப்படியே 'டிவி'யில போடும் சினிமா நிகழ்ச்சியை பார்த்தோமான்னு பலருக்கு தீபாவளி வீணாக முடிந்து விடுகிறது. இன்னும் சிலருக்கோ தீபாவளி என்பது மது அருந்தி, மாமிச உணவுகளை உண்ணும் ஒரு கொண்டாட்டமாகவே உள்ளது. இந்த இனிய தீபாவளிப் பண்டிகை பற்றி இன்றைய இளைய சமுதாயம் வரலாற்று பின்னணியுடன் தெரிந்து கொள்ளவே இந்த ஆதிமனிதன் கொளுத்திய 'மத்தாப்பூ'குரங்கிலிருந்து வந்த ஆதி மனிதன் தீயை கண்டறியா விட்டால் இன்றைக்கு நாமெல்லாம் பட்டாசு வெடித்திருக்க முடியாது. பூமியின் அற்புதப் படைப்பே 'தீ' என்கிறது யவன புராணம். ஆதிகாலத்தில் இடி, மின்னலால் மரங்கள், புதர்கள் தீப்பிடித்து குபுக்கென்று சிவப்பு நிற ஜூவாலைகள் தோன்றும். அந்த தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர தீயை பயன்படுத்தினான். தன்னை தாக்கும் மிருகங்களை தீயின் உதவியுடன் விரட்டியடித்து வெற்றி கொண்ட போது கையில் மத்தாப்பூ போல் தீயை வைத்து முழக்கமிட்டு, கூட்டமாக கொண்டாடிய ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆதிமனிதனுக்கு தீபாவளியே.தீயை அடக்கியாளப் பழகிய மனிதன் தீயை சிறு சிறு பொறியாக மாற்றி தீக்குண்டங்களில், அதாவது வேள்வியில் நிலை நிறுத்தினான். இதுவே பின்னாளில் சிறு ஒளியாக தீபமாக மாறியது. மனிதன் உயிர் வாழவும், உயிரை பாதுகாக்கவும் பயன்பட்டதால் 'தீ' புனிதமாக்கப்பட்டது. இன்றும் மாலை நேரத்தில், வீடுகளில் தீபமேற்றி செல்வத்தின் அதிபதி லட்சுமியை வரவேற்கும் முறை உள்ளது. எனவே, ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தீப ஒளி நம்மை காத்து வருகிறது.மனிதன் மனதிலுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறைவனை வணங்கினான். உள்ளத்து தீமையை சுட்டெரி 'தீ' என்ற அறிவை பயன்படுத்தி விரட்டி, குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்களை விலக்கி சங்கடங்கள் வந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். தீபாவளி மத்தாப்பூவைப் பார்த்தீர்களா? அதன் தலையில் நெருப்பை வைத்தாலும், வண்ண வண்ணமாய் பொங்கி எப்படி எல்லாம் சிரிக்கிறது பார்த்தீங்களா? அப்படி இருப்போமே!

காவிக்கு இல்லை கட்டுப்பாடு

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது அவசியம். ஐப்பசி மாதம் குளிர்காலம் என்பதால் வெந்நீரில் குளிக்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் சிறப்பு இருக்கிறது. நல்ல எண்ணெய்யில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய்த்தலையைக் கண்டால் அபசகுனம் என்பர். ஆனால், தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி இருப்பதால் நீராடுவோருக்கு வளம் பெருகும். காவியணிந்த துறவியும் கூட எண்ணெய் தேய்த்து நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும். இதன் மூலம் முன்வினைப்பாவம் கூட நீங்கும்.
டிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்

Added : நவ 06, 2018 02:54

மதுரை, கருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிச., 14க்குள் தமிழகத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படவுள்ளன.

இத்திட்டம் 288.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாநில கணக்காயர், அனைத்து கருவூல அலுவலகங்கள், சார்நிலை கருவூலங்கள், நிதித்துறை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும். மாநிலத்தில் அரசு துறைகளில் 29 ஆயிரம் சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் அலுவலர்களது சம்பள பட்டியலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர். அவை பரிசீலிக்கப்பட்டு ஒரு நாளில் சம்பளம் உள்ளிட்ட இதர பணப்பயன்கள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது மூன்று நாட்களில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.

கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கூறியதாவது: மாநிலத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களது பில்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதால் பேப்பர் இல்லாத அலுவலகங்களாக கருவூலங்கள் மாறும். கம்ப்யூட்டரில் பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறியலாம். மேலும் அரசு அலுவலர்கள் பணிப்பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாவதால், அவர்கள் சம்பள கணக்கு விவரங்களை உடன் அறியலாம். டிச., 15க்குள் கணினிமயமாக்கும் பணிகள் முடியும் என்றார்.

தீபாவளிக்கு கை கொடுத்த நகை சீட்டு வங்கி சேமிப்பை விட இதுக்கு மவுசு


Added : நவ 06, 2018 02:41

சென்னை, தீபாவளி பண்டிகையில், நகை கடைகளில், நகை சீட்டு வாடிக்கையாளர்களால், விற்பனை களைகட்டி உள்ளது. பொதுவாக, வங்கி சேமிப்பை விட, நகைச் சீட்டு மூலம் நகை வாங்கி சேர்ப்பதில், நடுத்தர, ஏழை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தீபாவளிக்கு, ஜவுளி கடைகளில் தான் திரளான கூட்டம் இருக்கும். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, இனிப்பு கடைகளில் கூட்டம் இருக்கும். இவற்றுக்கு இணையாக இப்போது நகைகடைகளிலும் கூட்டத்தை பார்க்க முடிகிறது. ஜப்பசி மாதம் பிறந்து விட்டால், பெரும்பாலான கிராம மக்கள், சுபகாரியங்களுக்கு தலைமுறை, தலைமுறையாக, நகைகடைகளில் நகைகள் வாங்குவது வழக்கம்.இவர்கள் அல்லாது பிற வாடிக்கையாளர்களை, நகை கடை பக்கம் வரச் செய்வதற்காக, நகை கடைகள் பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றன. இதில் முக்கிய இடம் பிடிப்பது மாதாந்திர சீட்டு. நடப்பாண்டு தீபாவளியில் நகை சீட்டு மூலம் பிரபலமான நகை கடைகளில் கோடிக்கணக்கில் விற்பனை நடந்துள்ளது.

சென்னை போன்ற பிரபல நகரங்களில், பிரபலமாக உள்ள கடைகளில், நகைசீட்டு விற்பனைதான் பிரதானமாக உள்ளது. நகைச்சீட்டு மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க பல்வேறு சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட தலைநகரங்களில், சிறிய அளவிலான நகைகடைகளுக்கு, நகை சீட்டுதான் வாழ்வதாரம். பழக்கம் இல்லாத கடைக்காரர்களிடம், நகை வாங்குவோர் எண்ணிக்கை குறைவு. இதனால் வழக்கமான வாடிக்கையாளர்களை தக்கவைக்க, நகை வியாபாரிகள் பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றனர்.

 இது, தீபாவளி வியாபாரத்துக்கும் கை கொடுக்கும். பட்டாசு, இனிப்புக்கு தீபாவளி பண்டு பிடிப்பது போல், நகைக்கும், மாதாந்திர சீட்டு பிடிப்பது, தமிழகத்தில், மதுரை, ஈரோடு போன்ற நகரங்களில் முக்கியமாக உள்ளது. இந்தாண்டு, தீபாவளிக்கு, ஈரோடு போன்ற நகரங்களில் மட்டும், நகைச்சீட்டு மூலம் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு, நகை விற்பனையாகியுள்ளது.மாதாந்திர சீட்டு போட்ட வாடிக்கையாளர், முதிர்வின் அடைப்படையில் நகை எடுத்து செல்கின்றனர். மாவட்டத்தில், 500 நகைக்கடைகளில், 200 கடைகள் மாதாந்திர நகை சீட்டு நடத்துகின்றனர். இந்த தீபாவளியை பொறுத்தவரை, நகை சீட்டு விற்பனையே, உள்ளூர் தங்க நகை வியாபாரிகளுக்கு கை கொடுத்துள்ளது. பண்டிகை முடிந்து, ஒரு வாரத்துக்கு பிறகும், இதே அளவு விற்பனை இருக்கும். ஒருவர் மாதம், 1,000 ரூபாய் செலுத்தினால், 12 மாதத்திற்கு, 12,000 பணம் செலுத்தியதற்கு அதே மதிப்புக்கு நகை எடுத்து கொள்ளலாம். இதற்கு, சேதாரம் இல்லை. செய்கூலி இல்லை.மேலும், சீட்டு சேரும் போது, பரிசு உட்பட சலுகை அளிக்கப்படுகிறது.

இதை வங்கி பிக்சட் டெபாசிட்டில் செலுத்தினால், கிடைக்கும் வட்டியை விட இது அதிகம் என பெண்கள் கருதுகின்றனர். மேலும், மாதத்தவணையாக செலுத்துவதால் சுமையாக தெரிவதில்லை. பெரும்பாலான மக்கள், தீபாவளிதோறும், நகை சேர்ப்பதை முக்கிய கடமையாக கொண்டுள்ளனர். அவர்களின் தேர்வு நகை சீட்டு தான்.நடுத்தர மற்றும் உயர்தர மக்கள், நகைச்சீட்டை நல்ல முதலீடாக பார்க்கின்றனர். சேமிப்புக்கு சேமிப்பு, நகையும் சேருவதால், பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் நகைச்சீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சென்னையில் உள்ள பிரபலமான நகைகடையில், 75 சதவீதத்திற்கு மேல், நகை வாங்க வருபவர்கள் நகை சீட்டு வாடிக்கையாளர்கள்தான்.

பறவைகள் உணவுக்காக 4 ஏக்கரில் தானியம் அலவாக்கோட்டை தம்பதியின் தாராள மனசு


Added : நவ 06, 2018 02:35








சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அலவாக்கோட்டையில் பறவைகள் உணவுக்காக 4 ஏக்கரில் தானியங்களை வளர்க்கின்றனர் வைரவன், ராஜேஸ்வரி தம்பதியினர்.55 ஏக்கரில் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்கின்றனர். மா மரங்கள் மட்டுமே 25 ஏக்கரில் உள்ளன.

 தென்னை, கொய்யா, புளி என, திரும்பிய இடமெல்லாம் பசுமையாக இருக்கிறது. பண்ணைக் குட்டை, கசிவுக் குட்டை என, நீர்மேலாண்மையில் அசத்தும் இவர்கள், 2 போகம் நெல் சாகுபடி செய்கின்றனர். கர்நாடக பொன்னி, அட்சயா பொன்னி போன்ற உயர்ரகங்களை பயிரிட்டு ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர்.இயற்கை மீது நேசம் கொண்ட இவர்கள், பறவைகளின் உணவுக்காக 4 ஏக்கரில் கம்பு, சோளம், பயறு வகைகளை வளர்க்கின்றனர். அதிகாலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை இங்கு காணலாம்.தேவையான உணவு கிடைப்பதால் கிளி, கொக்கு, நாரை போன்ற உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, கோடைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் வருகின்றன.

வி.வைரவன் கூறியதாவது: ஆரம்பக் கட்டத்தில் சாப்பிடவே கஷ்டப்பட்டோம். அப்படியிருந்தும் எங்கள் தாயார் பறவைகளுக்கு உணவிடுவதை மறக்கமாட்டார். அவரது நினைவாகவே பறவைகளுக்கு உணவளித்து வருகிறோம். இதற்காக இரண்டு பகுதிகளில் தலா 2 ஏக்கரை ஒதுக்கியுள்ளோம். பறவைகள் குறு, சிறுதானியங்களை விரும்பி உண்ணும். அதனால் அந்த வகைகளை சாகுபடி செய்கிறோம். இங்கு வரும் பறவைகள் எங்கள் மீது பாசமாக உள்ளன. நாங்கள் போய் நின்றாலும் பறப்பதில்லை. நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவி தான் தோட்டத்தை கவனிக்கிறார். பறவைகளை பார்க்கவே மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து விடுவேன், என்றார்.
பி.ஆர்க்., படிப்பில் சேர விதிகள் மாற்றம் பிளஸ் 2வில், 3 பாடங்கள் கட்டாயம்

Added : நவ 05, 2018 23:40


'பி.ஆர்க்., கட்டடவியல் படிப்புக்கு, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை கட்டாயம் படித்திருக்க வேண்டும்' என்ற நிபந்தனை, இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.இதற்கான உத்தரவை, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் பதிவாளர், ஓபராய் பிறப்பித்துள்ளார்.அதன் விபரம்:வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், பிளஸ், 2வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பொது தேர்வில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்று, நாட்டா நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.பிளஸ் 2 வகுப்பை முறைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 என, படித்திருக்க வேண்டும். டிப்ளமா முடித்தவர்களுக்கு, பிளஸ் 2வுக்கு சமமான கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கு, மத்திய மனிதவள அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

அரசு பஸ்களில் 6.50 லட்சம் பேர் பயணம்

Added : நவ 05, 2018 23:36


சென்னை,தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, 6.50 லட்சம் பேர், அரசு பஸ்களில் வெளியூர் சென்றுள்ளனர்.சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும், 2ம் தேதி முதல், நேற்று வரை, அரசு சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நவ., 2ம் தேதி இயக்கப்பட்ட, 2,968 பஸ்களில், 1.62 லட்சம் பேர்; 3ல், இயக்கப்பட்ட, 3,821 பஸ்களில், 2.24 லட்சம் பேர்; 4ம் தேதி இயக்கப்பட்ட, 3,665 பஸ்களில், 1.96 லட்சம் பேர்; நேற்று, மதியம் வரை இயக்கப்பட்ட, 980 பஸ்களில், 66 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.47 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மற்ற ஊர்களில் இருந்து, இரண்டு லட்சம் பேர், அரசு பஸ்களில் பயணித்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில், வழக்கமான கூட்டத்தை விட, நேற்று குறைவாகவே இருந்தது.

மழை எங்கே?ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று நள்ளிரவுக்கு பின், படிப்படியாக மழை துவங்கி, பரவலாக விட்டு விட்டு பெய்யும்.சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். காற்று வீசும் திசையை பொறுத்து, இந்த மாவட்டங்களில், கன மழைக்கான சாதகமான சூழல் ஏற்படும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'அடுத்த முதல்வர் விஜய்' சூடு கிளப்பிய, 'போஸ்டர்'

Added : நவ 05, 2018 23:35

சென்னை 'அடுத்த முதல்வர் விஜய்' என, தமிழகம் முழுவதும், 'போஸ்டர்' ஒட்டப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, நடிகர் விஜய் நடித்த, சர்கார் படம் வெளியாக உள்ளது. இதற்காக, அவரது ரசிகர்கள், விஜயை வாழ்த்தி, போஸ்டர், பேனர் அமைத்து வருகின்றனர்.அதில், 'அடுத்த முதல்வர் விஜய்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுவரை, தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் படங்களை போட்டு, அதனருகே, விஜய் படத்தை வைத்து, 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்' என, எழுதிஉள்ளனர்.இப்போஸ்டர், அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில், ''முதல்வர் கனவோடு நடிப்பவர்கள், திரையில் தான் ஆட்சி செய்ய முடியும். கள்ளக் கதையை வைத்து, கள்ள ஓட்டு பற்றி, படம் எடுக்கின்றனர். சினிமா சர்காரையே சரியாக நிர்வகிக்காதவர்கள், நிஜ சர்காரை எப்படி நிர்வகிப்பர்,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை பல்கலை 15ல், பட்டமளிப்பு விழா

Added : நவ 05, 2018 23:32


சென்னை, 'அண்ணாமலை பல்கலையில், வரும், 15ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாமலை பல்கலையில், பட்டம், முதுநிலை மற்றும் பிஎச்.டி., முடித்தவர்களுக்கான, 82வது பட்டமளிப்பு விழா, வரும், 15ல், பல்கலை வளாகத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், நேரடியாக பட்டம் பெறுவதற்கான தகுதிகள், பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பட்டம் பெற விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள், தங்கள் விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, பல்கலையின் பதிவாளர், ஆறுமுகம் அறிவித்துள்ளார்.

மதுரை -சிங்கப்பூர் விமானம் தாமதம்

Added : நவ 06, 2018 03:31 |

அவனியாபுரம், மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் இரவு 12:30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்படும் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படவில்லை. 70 பயணிகளும் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் திருட்டு; வாலிபர் கைது






ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 04, 2018 04:15 AM

ராஜபாளையம்,

நெல்லை மாவட்டம் தென்காசி மெயின்ரோட்டில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்ப்பவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). இவர் சென்னை சென்று நகை வாங்குவதற்காக கடையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக ரூ.30 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அரசு பஸ்சில் புறப்பட்டார். தென்காசியில் இருந்து சென்னை செல்லும் அந்த பஸ், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1½ மணிக்கு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்தது.

அங்கு பஸ் நின்றதும் பாலசுப்பிரமணியன் கீழே இறங்கினார். அப்போது பணப்பையை பஸ்சுக்குள்ளேயே வைத்திருந்தார். சிறிதுநேரத்தில் அந்த பையை ஒரு வாலிபர் நைசாக திருடிவிட்டு பஸ்சில் இருந்து இறங்கினார். இதை கவனித்து விட்ட பாலசுப்பிரமணியன், திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதைகேட்டதும் பணப்பையுடன் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் அங்கு நின்ற சக பயணிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சேக் முகமது (35) என்பதும், கடையநல்லூர் அருகே உள்ள இடைக்காலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவருடன் ஹைதர் அலி(40) என்பவரும் வந்துள்ளார். 2 பேரும் சேர்ந்து பாலசுப்பிரமணியன் பயணம் செய்த பஸ்சில் அவரது அருகிலேயே இருந்து பயணித்துள்ளனர்.

தகுந்த நேரம் பார்த்து பணப்பையை அபேஸ் செய்ய திட்டமிட்டு ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் கீழே இறங்கிறதும் பணப்பையை எடுத்துள்ளனர். ஆனால் சேக் முகமது பிடிபட்டு விட்டார். ஹைதர் அலி தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஹைதர் அலியை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாவட்ட செய்திகள்

கோட்ட நத்தம் பஞ்சாயத்து ஊழியரின்: ஊதிய நிலுவைத்தொகை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு



விருதுநகர் யூனியன் கோட்டநத்தம் பஞ்சாயத்து ஊழியரின் பணியை வரன்முறை படுத்துவதுடன் ஊதிய நிலுவையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 06, 2018 03:45 AM

விருதுநகர்,

விருதுநகர் யூனியன் கோட்டநத்தம் பஞ்சாயத்தில் கண்ணன் என்பவர் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அப்போது இருந்த பஞ்சாயத்து குழுவினரால் நியமனம் பெற்றுள்ளார். பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு பஞ்சாயத்து நிர்வாகம் இவருடைய மாத ஊதியத்தை ரூ.2 ஆயிரமாக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றிஉள்ளது. அதன் பின்னர் இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாத ஊதியம் மற்றும் இதர பலன்கள் வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து கோட்டநத்தம் பஞ்சாயத்து மேல்நிலை குடிநீர் தொட்டி, மோட்டார் இயக்கும் பணி மேற்கொண்டு வரும் கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது பணியை வரன்முறை படுத்த வேண்டும் என்றும் தனக்கு சேரவேண்டிய ஊதிய நிலுவை தொகை மற்றும் இதர பணப்பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்ததாகவும் ஆனால் அந்த மனுமீது நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் தனது பணியை வரன்முறை படுத்தவும் ஊதிய நிலுவை மற்றும் இதர பணப்பலன்களை வழங்க உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கையை முழுமையாக ஆய்வு செய்ய தேவையில்லாத நிலையில் மாவட்ட கலெக்டர் மனுதாரரின் மனுவை தொடர்புடைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்தி வேறு ஏதும் பிரச்சினை இல்லாத நிலையில் இந்த உத்தரவு கிடைத்த 2 மாதங்களில் அவரது பணியை வரன்முறை படுத்தவும் ஊதிய நிலுவை தொகை மற்றும் இதர பணப்பலன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மாவட்ட செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் திடீர் ஆய்வு






சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: நவம்பர் 06, 2018 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அவர் சேலம் மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் குறித்தும், காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ரோகிணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், சிறப்பு வார்டில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் தாரேஸ் அகமது கேட்டறிந்தார்.

இதன்பிறகு தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை 180 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரைகள் தேவையான அளவில் இருப்பு வைப்பதற்கு அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சல் அறிகுறி வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தாரேஸ் அகமது கூறினார்.

முன்னதாக டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மாநகர நகர்நல அலுவலர் பார்த்திபன் மற்றும் டாக்டர்களுடன் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செய்திகள்

கூடுவாஞ்சேரி சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி





கூடுவாஞ்சேரியில் சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பதிவு: நவம்பர் 06, 2018 04:00 AM

காஞ்சீபுரம்


கூடுவாஞ்சேரியில் சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.


நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் இன்று(செவ்வாய்க்கிழமை) தீபாவளிக்கு தமிழக முழுவதும் வெளியாகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா தியோட்டரிலும் ‘சர்கார்’ படம் வெளியிடப்படுகிறது.

  இன்று திரையிடப்படும் அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை 10 மணிக்கு வழங்கப்படும் தியேட்டர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று காலை 9 மணி முதலே வெங்கடேஸ்வரா தியேட்டரில் டிக்கெட் வாங்குவதற்காக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

ரசிகர்களின் கூட்டத்தை தியேட்டர் ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் காலை 10 மணிக்கு டிக்கெட் வழங்குவதாக இருந்த டிக்கெட்டுகளை 9.30 மணிக்கே தியேட்டர் ஊழியர்கள் வழங்க தொடங்கினர். ஆனால் ரசிகர்கள் ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கெட் வாங்கவில்லை. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்க முயன்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் பல பேர் டிக்கெட் கவுண்ட்டருக்குள் கையை விட்டு டிக்கெட் வாங்க முயன்றனர். டிக்கெட் வழங்க முடியாமல் ஊழியர்கள் திணறினர்.

ஒரு சில ரசிகர்கள் தங்களுக்கு 5 டிக்கெட் வழங்கவேண்டும். நாங்கள் உள்ளூர்க்காரர்கள் என்று டிக்கெட் வழங்கும் ஊழியரிடம் தகராறு செய்தனர். அப்போது சில ரசிகர்கள், டிக்கெட் கவுண்ட்டரின் கண்ணாடியை திடீரென உடைத்தனர். இதனால் தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பயந்து போன தியேட்டர் ஊழியர்கள், உடனே கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலீப்குமார், டிக்கெட் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தார்.

ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து கலாட்டா செய்துக்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் திலீப்குமார் திடீரென தனது கையில் வைத்திருந்த லத்தியால் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார். தடியடிக்கு பயந்து ரசிகர்கள், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஒரு சில ரசிகர்கள், தியேட்டர் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடினார்கள்.

இதையடுத்து டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டு, கவுண்ட்டரும் மூடப்பட்டது. இதனால் விஜய் படத்தை முதல் நாளில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் வந்த பொதுமக்கள் சிலர் டிக்கெட் வாங்க முடியாமல் நீண்ட நேரமாக தியேட்டார் வாசலில் காத்திருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலையங்கம்

முட்டையின் விலை ரூ.15 ஆகிவிடுமா?





சமீபத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 06 2018, 03:30

எந்தவொரு புதிய கோழிப்பண்ணை தொடங்கப்பட்டாலும் கூண்டுகளை உபயோகிக்காமல் இருப்பதை மத்திய அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்க்க தடைசெய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது கோழிப்பண்ணை தொடங்கி, அதன்மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஏராளமான வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் இன்றுகூட வீட்டின் முட்டை தேவைக்காக கோழிவளர்ப்பவர்கள் வீடுகளில் கோழிக்கூண்டு வைத்திருப்பார்கள். அந்தக்கூண்டிலிருந்து காலையில் கோழிகளை வெளியே திறந்துவிட்டால், அருகிலுள்ள இடங்களில் மேய்ந்தபிறகு மாலையில் அதுவே கூண்டுக்கு வந்துவிடும். இல்லையென்றால், வீட்டில் உள்ளவர்களே கோழிகளை விரட்டி கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள்.

வீடுகளில் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்த கோழிவளர்ப்பு, வியாபார ரீதியில் பண்ணை முறையில் நடத்தப்படும் தொழிலாக வளர்ந்துவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள 11 கோடியே 73 லட்சம் கோழிகளின் எண்ணிக்கையில், 10 கோடியே 34 லட்சம் கோழிகள் கோழிப்பண்ணைகளில் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தினமும் 4 கோடி முட்டைகள் இந்தப்பண்ணைகளில் இருந்து கிடைக்கிறது. தமிழக அரசும் கோழிப்பண்ணை தொடங்குபவர்களுக்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. 5 ஆயிரம் கோழிகள் கொண்ட கறிக்கோழி பண்ணை ஒரு குடும்பத்தினுடைய உழைப்பை மட்டுமே கொண்டு லாபகரமாக செயல்படும். இந்தத்திட்டத்தின்கீழ் மாநில அரசின் 25 சதவீத மானியமாக ரூ.2 லட்சத்து 68,750 ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது. மேலும் நாட்டுக்கோழி வளர்த்தால் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 கோழிகளை வளர்ப்பதற்கு 25 சதவீத தமிழக அரசின் மானியமாக ரூ.38,750 வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், தமிழக அரசு ஏழை குடும்பங்களுக்கு 50 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கும், கோழிமுட்டைக்கும் நல்லகிராக்கி இருப்பதால், கோழிவளர்ப்பு தொழிலை எல்லா மாநிலங்களும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நிலையில், புதிதாக கோழிப்பண்ணை தொடங்குபவர்கள் கூண்டில் வைத்து வளர்க்கக்கூடாது. திறந்தவெளியில்தான் வளர்க்கவேண்டும் என்றால் நிச்சயமாக நடைமுறையில் சாத்தியமில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் கோழிகளை வேண்டுமானால் திறந்தவெளியில் வளர்க்கமுடியும். ஆனால், அதற்கு தீவனம் போடுவது, தண்ணீர் வைப்பது, முட்டைகளை உடையாமல் எடுப்பது என்பதெல்லாம் மிகவும் கஷ்டமான ஒன்றாகும். மேலும் அரசின் மானியத்தைப்பெற்று கோழிப்பண்ணைகளை தொடங்கும் வேலையில்லா பட்டதாரிகள் எல்லாருக்கும், ஏக்கர்கணக்கில் நிலம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இந்தநிலையில், இதுபோன்ற தடைகளை விதித்தால் யாரும் கோழிப்பண்ணைகளை தொடங்க முடியாது. சுப்ரீம்கோர்ட்டு விதித்துள்ள இடைக்காலத்தடை நீடிக்கும் பட்சத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.15 ஆக உயரும் என்று தமிழ்நாடு முட்டைக்கோழி சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியுள்ளார். எப்படி பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தவுடன், தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்ததோ, அதுபோல இந்தவழக்கிலும் உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும். முட்டைக்கோழி பண்ணையாளர்களும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யவேண்டும். கோழிகளை கூண்டில் வளர்க்க தடைவிதிப்பதை சுப்ரீம்கோர்ட்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும்.
தேசிய செய்திகள்
 
சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீஸ் குவிப்பு சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு

சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீஸ் குவிப்பு சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு
 
சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 
 
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில், ஐப்பசி மாத வழிபாட்டுக்காக கடந்த மாதம் 17–ந்தேதி முதல் 22–ந் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த இளம்பெண்களை அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அந்த பெண்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம், வன்முறையில் ஈடுபட்டதாக 3,731 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் ஆகியோர் கோவில் நடையை திறந்தனர்.

அய்யப்ப தர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் நேற்று சன்னிதானத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் வராததால், அசம்பாவிதம் எதுவும் இன்றி நேற்று கோவிலில் பூஜை அமைதியாக நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது என்று தீர்மானித்துள்ள முதல்–மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அரசு, பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முறையும் போராட்டங்கள் நடைபெறலாம் என்று கருதி சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. 

பாதுகாப்புக்காக கோவில் சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதிரடிப்படை கமாண்டோ வீரர்கள் 20 பேர் மற்றும் கலவர தடுப்பு போலீசார் உள்பட 2,300–க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணிக்கு கேரள அரசு நியமித்து உள்ளது. 

சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் 15 பேர் நிறுத்தப்பட்டு உள்ளனர். சபரிமலை கோவிலில் பெண் போலீசார் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

செல்போன் சேவையை முடக்குவதற்காக, கோவிலில் தந்திரி கண்டரரு ராஜீவரு அறையின் முன்பும் மற்றும் சில இடங்களிலும் ‘ஜாமர்’ கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தந்திரிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். கோவில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை பகுதியில் 3 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழி முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

எருமேலிக்கு நேற்று முன்தினம் மாலை வந்து சேர்ந்த பக்தர்கள் சிலர் அங்கேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பைக்கு செல்ல தங்களை அனுமதிக்கவேண்டும் என்று அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று காலை அவர்கள், அய்யப்ப சரணம் கோ‌ஷங்களை முழங்கியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காலை 10 மணி அளவில் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வாகனங்களில் வந்த பக்தர்களை நிலக்கல்லில் போலீசார் தடுத்து நிறுத்தி, அரசு பஸ்களில் பம்பைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். பஸ்கள் கிடைக்காததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பம்பைக்கு நடந்து சென்றனர். பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்களை போலீசார் அனுமதித்தனர்.

கோவிலுக்கு செல்ல போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதாகவும், நிலக்கல்லில் இருந்து 

பம்பைக்கு செல்ல அரசு போதிய பஸ் வசதி செய்து கொடுக்கவில்லை என்றும் கூறி கேரளாவில் பல இடங்களில் பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினார்கள். அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன.

சபரிமலைக்கு செய்தி சேகரிப்பதற்காக பெண் பத்திரிகையாளர்களை அனுப்பி வைக்க வேண்டாம் என்று ஊடகங்களை சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு ஏற்கனவே கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தி சேகரிப்பதற்காக வந்த பத்திரிகையாளர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பைக்கு செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் சில பெண் பத்திரிகையாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பம்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கேரளாவில் உள்ள செருதலா என்ற இடத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற 25 வயது இளம்பெண் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன், சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக நேற்று பம்பைக்கு வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். சன்னிதானம் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். அவரது பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பூஜைக்கு பின்னர் நேற்று இரவு 10 மணி அளவில் கோவில் நடை சாத்தப்பட்டது. திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பூஜைக்கு பின்னர் இன்று இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படும்.

அதன்பிறகு மண்டல பூஜை, மகரவிளக்கு வழிபாட்டுக்காக வருகிற 16–ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 

இதற்கிடையே, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று கேரள அரசுக்கும், முதல்–மந்திரிக்கும் உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த கேரள ஐகோர்ட்டு, சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றபோதிலும் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் கோவிலுக்கு செல்வதை தடுக்கக்கூடாது என்றும், கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் கூறியது. அத்துடன் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறி பக்தர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கூறியது.

கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பெயர் மற்றும் முகவரியை போலீசார் கேட்டு எழுதுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.

Chitlapakkam issue yet to subside

DECCAN CHRONICLE. | R LENIN

PublishedNov 5, 2018, 1:45 am IST

“Two days after the police filed the case against us, the board describing work order details was put up in the same place,”



The channel dug up in Chitlapakkam. (DC)


CHENNAI: A few days ago, the southern suburb Chitlapakkam had hit the headlines. The reason: Four residents of Chitlapakkam questioned unapproved civic works that civic officials of Chitlapakkam town panchayat had taken up on two streets.

Of the four activists, two from the flood-prone Chitlapakkam were arrested, after officials filed a case in Chitlapakkam police station and subsequently, the police slapped FIR against four activists - Kumar, Balachandar, Sunil Jayaram and Shivakumar. Later, Balachandar and Kumar were taken to Puzhal prison.

Speaking to Deccan Chronicle, Sunil Jayaram, one of the activists, said, “We asked basic questions only. However, the officials on purpose filed a case against us. The case was fabricated. Even as we first filed a case, the police miserably failed to act on the complaint, however, they took the side of the officials.” This was a deliberate attempt to muzzle dissenting voices, he noted.

Sunil also said that the arrested activists were struggling even after they were released as both of them were instructed to sign in the registrar twice a day in Manimangalam police station. “Two days after the police filed the case against us, the board describing work order details was put up in the same place,” he noted.

Similarly, Jayaram Venkatesan, convener of Arappor Iyakkam, an organisation that fights for eliminating corruption, said, “The officials concerned should know the fact that every citizen has a right to ask questions. For merely questioning government officials, citizens should not be punished. We will continue our struggle to eradicate irregularities in any kind of work.” Justice would be done in this case, he said, exuding confidence.


P. Viswanathan, coordinator of Chitlapakkam Residents Welfare Association said, “All water channels in Chitlapakkam and adjacent areas should be restored, as they are hugely encroached. Surplus rainwater during the season would be stored in the nearby lakes and floods would also be avoided.” When contacted by Deccan Chronicle, P. Ponnaiah, District Collector of Kancheepuram, said that he was not pressurising police to file the cases against activists. “I thoroughly enquired with the civic officials and based on their complaints, I informed police to file case. As far as works are concerned, every work in Chitlapakkam is properly done as per norms,” he pointed out.

It may be noted that the quartet asked questions on the work orders for the storm water project on October 19, while the officials kept digging the road in Sethunarayanan and Ramanan streets.
Pudukottai: Black magic woman held for child sacrifice

DECCAN CHRONICLE.

PublishedNov 6, 2018, 2:13 am IST

Remanded under section 302 (murder) of the IPC, Chinnapillai has been lodged in the Trichy central women's prison.


Chinnapillai, the accused

Pudukottai: A black magic practitioner was arrested for allegedly killing a four-year-old girl by slitting her throat with a blade as sacrifice to her deity at Kurumpatti village near Iluppur in Pudukottai district. 47-year-old Chinnapillai confessed to the crime and has been remanded to custody on Monday, Inspector P. Mangayarkarasi told Deccan Chronicle.

She said the alleged killer lived close to the house of the victim, Shalini, and on October 25, she had lured her to a deserted place about half km from their place of residence promising something to eat. It was a spooky spot that the villagers would usually keep away from out of for fear that a local deity, Chemmuni, lurked there looking for human blood.

The black magic practitioner had decided to offer the girl in sacrifice to Chemmuni hoping that would propitiate her deity and her failing black magic business would pick up, Inspector Mangayarkarasi said, adding that the woman told the police after arrest that her clientele had shrunk and a recent disaster had literally led to the villagers banishing her.

"It appeared that this woman had an assistant and together they would go into the burial ground to conduct their ritualistic worship of the spirits. On one such occasion some three months ago, the assistant witnessed something weird and suffered shock. He became bed-ridden and died. After that, the villagers told the woman she should not practice her black magic there anymore and Chinnapillai was forced to look for clients outside. She decided a human sacrifice to Chemmuni would set things right for her", Inspector Mangayarkarasi said, expressing anguish that even in this modern age, such gruesome voodoo practices exist.

Chinnapillai's two sons are married and live elsewhere. Her husband Singaram works in a tasmac liquor shop at Coimbatore. He rushed back on hearing about his wife's crime. Remanded under section 302 (murder) of the IPC, Chinnapillai has been lodged in the Trichy central women's prison.

GATE might be compulsory for engineering students as exit exam

Interestingly, for candidates who have completed their engineering course, the degree certificate will be awarded only after they clear GATE, said AICTE officials.

Published: 04th November 2018 03:12 AM 



Image used for representational purpose only.

Express News Service

BENGALURU: Students pursuing technical courses across the country for the academic year 2019-2020 might soon have to write a mandatory ‘Exit Exam’ and pass it to get their degree certificate. The All India Council for Technical Education (AICTE) passed a resolution making Graduate Aptitude Test in Engineering (GATE) for engineering graduates mandatory in all institutions of technical education in the country.

This decision was taken at a recent AICTE meeting in New Delhi. Considering the increase in the number of unemployed graduates even after graduation, the AICTE has taken this decision. Interestingly, for candidates who have completed their engineering course, the degree certificate will be awarded only after they clear GATE, said AICTE officials. The rest have to re-appear for GATE.

“The degree certificate will be awarded to students only after they clear the exit examination,” said an official source at AICTE. There are over seven lakh students who graduate from around 3,000 engineering institutions across the country every year.


Prof Jagannath Reddy, Registrar of Visvesvaraya Technological University, said, “We have yet to receive a communication about it. Once we are notified, an official circular at the university level will be issued.”

However, the AICTE move has received mixed reactions. Some faculty members welcomed it while some say it will be of no use. The student community is not happy with the decision.

“This is really a good move and I hope this will increase the chances of engineering graduates getting employment,” said a principal of a private engineering college in the city. Dr Manjunatha B, Principal of New Horizon College of Engineering, said, “It depends on individual skill and instead of conducting an exit exam, it is better for colleges to conduct an aptitude test, a technology test or communication skills test at least once each semester.”

Another principal felt that this may affect the students who have already got placed. “What if a student who gets placed fails to clear the exit exam? The company will not take him in without a degree certificate and now the AICTE is saying that there won’t be any degree certificate unless they clear GATE,” said the principal.

Students find this step unnecessary. “If someone does not get employed even after completing the course then it an individual problem and not a general one. I don’t understand why the AICTE is generalising this,” questions a student.

Meanwhile, there is no clarity if the exit exam will be conducted on a national level by AICTE or by the technical universities of the states or by the colleges themselves. Colleges and universities are yet to be officially notified about it.

NEWS TODAY 25.09.2024