Saturday, March 24, 2018

அதிகத் தூக்கம், குறைவான தூக்கம் - என்ன வித்தியாசம்?


Yahoo நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மரிஸா மேயருக்கு (Marissa Mayer) ஒவ்வோர் இரவும் 4 மணி நேரத் தூக்கம் போதுமாம்.

இந்தியாவின் முன்னாள் அதிபர் காலஞ்சென்ற அப்துல் கலாமிற்கு 5 மணி நேரத் தூக்கம் போதுமாம்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 6 மணி நேரத் தூக்கம் போதுமாம்.

ஆனால் எனக்கு மட்டும் எவ்வளவு தூங்கினாலும் போதுமென்று தோன்றுவதில்லையே ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
ஏன் சிலருக்கு அதிக நேரத் தூக்கம் தேவைப்படுகிறது? ஏன் சிலருக்கு அது தேவைப்படுவதில்லை.

1. மரபியல் காரணங்கள்
எத்தனை மணிக்குச் சாப்பிட வேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பனவற்றை உடல் இயல்பாகவே நிர்ணயிக்கும். அதன் பெயர் circadian clock. இது ஒவ்வொருவரிடமும் வேறுபடுவதால் நமது உடலுக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவும் வேறுபடுகிறது.

2. தூக்கப் பிரச்சினைகள்

தூக்கத்தைப் பல பிரச்சினைகள் பாதிக்கக்கூடும்.  Hypersomnia இருப்பவர்கள் 10 மணி நேரம் தூங்கினாலும் அவர்களுக்கு அது போதுமானதாக இருக்காது. தூக்கமின்மையால் அவர்கள் குழப்பமடைந்த நிலையில் இருப்பார்கள்.
கழிவறையைப் பயன்படுத்தவும் சாப்பிடவும் மட்டுமே கட்டிலிலிருந்து எழுவார்கள். இருந்தாலும் தூக்கம் போதாது Kleine-Levin நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. இத்தகைய தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் எந்த வயதினரையும் பாதிக்கக்கூடும்.
3. மன ஆரோக்கியம்

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நேரம் தூங்குவார்கள். மனநலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளும் தூக்கத்தை கூடுதல் செய்யக்கூடும்.
4. மூளையில் பாதிப்பு

மூளையில் பலத்த காயம் ஏற்படும்போது அது சிலருக்கு அதிகத் தூக்கத்தை உண்டாக்கும். இதனைக் கண்டுபிடித்துள்ளது ஓர் ஆய்வு.
அதோடு மூளைக் காயம் ஏற்பட்டவர் குணமடையவும் தூக்கம் இன்றியமையாத ஒன்று.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...