தகனம் செய்யப்பட்ட காதல் மனைவி உயிரோடு வந்ததால் கணவர் அதிர்ச்சி
Added : மார் 06, 2018 01:46
தஞ்சாவூர்: இறந்து போனதாக தகனம் செய்யப்பட்ட பெண், கடைவீதியில் உயிரோடு சுற்றித் திரிந்ததால், கணவரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த, திருபுவனத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன், ராமச்சந்திரன், 45. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஷா, 42, என்பவருக்கும், 25 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, விக்னேஸ்வரன், 22, என்ற மகன் உள்ளார். ஆஷாவுக்கு மனநிலை சரியில்லாததால், 13 ஆண்டுகளுக்கு முன், அவரை ராமச்சந்திரன், விவாகரத்து செய்தார்.பிப்., 26ம் தேதி, அடையாளம் தெரியாத பெண் மயங்கிய நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இறந்த பெண், ஆஷா என, சில நாட்களுக்கு பின், போலீசார் அடையாளம் கண்டுபிடித்து, ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். ராமச்சந்திரனும் உடலை பெற்று, அதை முறைப்படி தகனம் செய்தார்.இந்நிலையில், நேற்று காலை, திருபுவனம் கடைவீதியில், மனநிலை பாதிக்கப்பட்ட ஆஷா, வழக்கம் போல் சுற்றித் திரிந்துள்ளார். இதைப்பார்த்த ராமச்சந்திரனும், அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த பெண் யார் என்றும், அதை ராமச்சந்திரனிடம் போலீசார் எப்படி ஒப்படைத்தனர் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

No comments:
Post a Comment