பெயருக்கு முன் டாக்டர் பட்டம் 'பிசியோதெரபிஸ்ட்' மீது நடவடிக்கை
Added : மார் 25, 2018 00:26
சென்னை: பெயருக்கு முன், 'டாக்டர்' என, சேர்த்து கொள்ளும், 'பிசியோதெரபிஸ்ட்'களுக்கு எதிராக, குறிப்பிட்டு புகார் கொடுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பெயர்களுக்கு முன், டாக்டர் என்ற வார்த்தையை, பிசியோதெர பிஸ்ட்டுகள் சேர்த்து கொள்கின்றனர். மருத்துவ சீட்டு, அடையாளச் சீட்டு, பெயர் பலகைகளில், டாக்டர் என, குறிப்பிட்டு கொள்கின்றனர்.சிலர், தங்களை டாக்டர்களாக காட்டி கொள்கின்றனர். இவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும்படி, போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், குயில்மொழி, ''பெயருக்கு முன், டாக்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என, ௨௦௦௮ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ''இது குறித்து, டி.ஜி.பி., போலீஸ் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என்றார்.டி.ஜி.பி., மற்றும் போலீஸ் கமிஷனர் தரப்பில், சிறப்பு பிளீடர், வி.எஸ்.சுந்தர், ''பொத்தாம் பொதுவாக, உத்தரவு பிறப்பிக்கும்படி, மனுதாரர் கோர முடியாது. குறிப்பிட்டு புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், சட்டப்படி நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.மனுவை விசாரித்த நீதிபதி, கே.கல்யாணசுந்தரம் பிறப்பித்த உத்தரவில், 'சிறப்பு பிளீடர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது. 'உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட போலீசில், குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளிக்கப்பட்டால், சட்டப்படி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment