Wednesday, March 7, 2018

எம்.பி.,க்களுக்கு, 'பென்ஷன்': சுப்ரீம் கோர்ட் அதிரடி

Added : மார் 07, 2018 01:45




புதுடில்லி : 'எம்.பி.,க்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும் பார்லி.,யின் அதிகாரத்தில் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பதவிக்காலம் முடிந்த பின், எம்.பி.,க்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு ஓய்வூதியம், சலுகைகள் வழங்கப்படுவதை எதிர்த்து, 'லோக் பிரஹாரி' என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஜே. சலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:எம்.பி.,க்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது குறித்த பார்லிமென்டின் முடிவில் தலையிட முடியாது. இது பார்லி., அதிகாரம்.

அதே நேரத்தில், இவ்வாறு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் எந்த நடைமுறை கையாளப்படுகிறது என்பது குறித்து கேள்வி எழுப்ப முடியும். இது குறித்து, மத்திய அரசு, தன் பதிலை அளிக்க வேண்டும். கடந்த, 2006ல் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்களின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறிஉள்ளது.வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024