ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம்: எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Updated : மார் 07, 2018 05:06 | Added : மார் 07, 2018 04:02 |
சென்னை: சென்னையில் போலீஸ் நிலையத்திலேயே இரவு பணியில் இருந்த எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருந்தவர் சதீஷ் ( 28) நேற்று வழக்கம் போல் இரவு பணி பார்த்துக்கொண்டிருந்தார் அதிகாலையில் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட அவரது உடல் அருகே கடிதம் ஒன்று இருந்தது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என எழுதி வைத்துள்ளார்.
தகவலறிந்த உயரதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள் சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சி.சி.டி.வி கேமிராவில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. சிரஞ்சீவியிடம் சாவியை வாங்கி துப்பாக்கியால் தனக்குதானே சுட்டுகொண்டது பதிவாகியுள்ளது.உயிரிழந்த சதீஷ் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம்
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த அருண்ராஜ், 27, என்ற போலீசார் சென்னை மெரினாவில் ஜெ, நினைவிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் . இந்நிலையில் இரண்டாவதாக எஸ்.ஐ. சதீஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட சதீ்ஷ் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் எனவும், 2011-ம் ஆண்டு நேரிடையாக எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.
காவல் துறை அதிர்ச்சி
போலீஸ் முதல் அதிகாரிகள் வரை தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இச்சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆணையர் நேரில் ஆய்வு
தற்கொலை சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு நடத்தினார்.

No comments:
Post a Comment