'நீட்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம்
Added : நவ 18, 2018 23:18
சென்னை: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடிக்கும், மாணவ - மாணவியர், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் கல்வி நிறுவனங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பல லட்சம் ரூபாய் செலவு செய்து, சிறப்பு பயிற்சி வழங்குகிறது. அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள, நீட் தேர்வுக்கு, நவ., 1ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், கடைசி நேர பிரச்னைகளை தவிர்க்க, பதிவுகளை விரைந்து முடிக்குமாறு, மாணவர்களை தேசிய தேர்வு முகமை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment