Monday, November 19, 2018


வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Added : நவ 18, 2018 12:52




சென்னை: தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், சற்று வலுப்பெறும். தொடர்ந்து, மேற்கு திசையில் நகர்ந்து, 20ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் கடலோர பகுதியில் நிலை கொள்ளக்கூடும். இதனால், 19ம் தேதி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய துவங்கும். 20, 21 தேதிகளில் படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த தாழ்வு பகுதி புயலாக மாறாது.

கனமழை

19ம் தேதி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.எச்சரிக்கைமீனவர்கள் 18 ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். 19ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 20,21ம் தேதிகளில் தென் மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கும் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024