Thursday, November 15, 2018

முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் : குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்

Added : நவ 14, 2018 22:37



திருச்சி: முசிறியில், கூலித் தொழிலாளியின் மனைவி, 11வது பிரசவத்தில், 12வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.திருச்சி, முசிறியைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளி கண்ணன், 47; மனைவி சாந்தி, 45. இவர், 10 முறை கர்ப்பமடைந்து, ஒரு முறை இரட்டை குழந்தை என மொத்தம், 11 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில், மூன்று குழந்தைகள் இறந்து விட்டன.எட்டு குழந்தைகள்தற்போது, ஐந்து மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரு பெண்களுக்கு திருமணம் முடிந்து, சாந்திக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். சாந்தியின், 10 பிரசவங்களுமே, வீட்டிலேயே சுகப்பிரசவமாக நடந்துள்ளன. பிரசவத்துக்கு, அவரது கணவரே உதவி செய்துள்ளார்.

இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு முன், சாந்தி மீண்டும் கர்ப்பமானார். இந்த பிரசவத்தையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்த தம்பதி, மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இது குறித்து, கிராம செவிலியர் மூலம் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர், கடந்த மாதம், 25ம் தேதி, சாந்தியை வீட்டில் சந்தித்து, மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர்.மறுத்த சாந்தி, 'அங்கு வந்தால், குடும்பக் கட்டுப்பாடு செய்து விடுவீர்கள்' எனக் கூறி, காவிரி ஆற்றில் இறங்கி ஒளிந்து கொண்டார். போலீசாரின் உதவியுடன், அவரை முசிறி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சை அளித்தனர்.தீபாவளிக்கு, 'எஸ்கேப்'தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வருவதாக கூறி, மருத்துவமனையில் இருந்து சென்ற சாந்திக்கு, 12ம் தேதி இரவு வீட்டிலேயே, 12வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த சுகாதாரத் துறையினர், நேற்று முன்தினம் அவரை, தண்டலைபுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஒரு பிரசவத்தையே பெரும் பிரச்னையாகக் கருதும் காலத்தில், 11 பிரசவங்களையும் வீட்டிலேயே பார்த்துக் கொண்ட சாந்தி கூறியதாவது:என் பிரசவத்தை நானே பார்த்துக் கொள்வேன். கணவர் உதவி செய்வார். இந்த பிரசவத்துக்கும் அவர் தான் உதவினார். பிரசவம் முடிந்ததும், குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து, குளிப்பாட்டி, அரை மணி நேரத்திற்கு பின், டீ குடித்து, வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.அதற்குள் வந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டனர். 

நான் நன்றாக வேலை பார்ப்பேன். கர்ப்பம் பற்றி கவலைப்படாமல் வேலை பார்ப்பேன். சுகப்பிரசவத்துக்கு வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை. பிரசவ நேரத்தில், கணவரைத் தவிர வேறு யாரையும் பக்கத்தில் விட மாட்டேன். இந்த முறை தான் கொஞ்சம் சோர்வாக இருந்தது.இவ்வாறு, சாந்தி கூறினார்.மணல் விற்பனைகாவிரி ஆற்றங்கரையில் மூட்டையில் மணல் அள்ளி விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில், சாந்தி, பிள்ளைகளை வளர்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், ஒரு நாளைக்கு, 300 மூட்டைக்கு மேல் மணல் சுமந்து விற்று விடுவார். இதுவே, சுகப்பிரசவத்துக்கு காரணம் என, சாந்தி கூறுகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024