Thursday, November 15, 2018

விமானத்தில் தகராறு: போதை பெண் கைது

Added : நவ 14, 2018 21:15

மும்பை: 'ஏர் இந்தியா' விமானத்தில், அதிக மதுபானம் வழங்காத, விமான பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டி, தகராறில் ஈடுபட்ட, பெண் பயணியை, போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து, பிரிட்டன் நாட்டின், லண்டன் நகருக்கு, இயக்கப்பட்ட, ஏர் இந்தியா விமானத்தில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தீவு நாடான, அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தாள்.விமானம் புறப்பட்டதும், இரண்டு முறை மதுபானம் வாங்கி குடித்த அந்த பெண், மறுபடியும் மதுபானம் கேட்டபோது, விமான பணிப்பெண், வழங்க மறுத்துவிட்டார்.இதையடுத்து, விமான பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தடுக்க வந்த ஊழியரின் கன்னத்திலும், அந்த பெண் அறைந்தாள்.இந்த காட்சிகளை விமான ஊழியர் ஒருவர், 'வீடியோ'வாக பதிவு செய்தார். பயணியின் செயல் குறித்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விமான நிறுவனம் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விமானம், லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த பெண் பயணியை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024