Friday, November 16, 2018


'கஜா'வால் 4 ரயில்கள் ரத்து

Added : நவ 16, 2018 05:28


சென்னை:'கஜா' புயல் காரணமாக, நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

* சென்னை, எழும்பூரில் இருந்து, நேற்று இரவு, 9:30 மணிக்கு இயக்க வேண்டிய, மன்னை எக்ஸ்பிரஸ்; இரவு, 10:00 மணிக்கு இயக்க வேண்டிய, காரைக்கால் எக்ஸ்பிரஸ். இரவு, 10:40 மணிக்கு இயக்க வேண்டிய, உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்கள், நேற்று ரத்து செய்யப்பட்டன

* தஞ்சாவூரில் இருந்து, திருச்சிக்கு இன்று காலை, 7:30 மணிக்கு இயக்க வேண்டிய பயணியர் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.மாற்று வழியில் இயக்கம்

* சென்னை, எழும்பூரில் இருந்து, நேற்றிரவு, 7:15 மணிக்கு இயக்கப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ். தாம்பரத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு இரவு, 11:00 மணிக்கு இயக்கப்பட்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை வழிக்கு பதிலாக, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்பட்டன

* மதுரையில் இருந்து, சென்னை எழும்பூருக்கு நேற்றிரவு, 9:05 மணிக்கு இயக்கப்பட்ட மகால் எக்ஸ்பிரஸ். திருநெல்வேலியில் இருந்து, தாம்பரத்துக்கு நேற்று மாலை, 5:15 மணிக்கு இயக்கப் பட்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியில் இயக்கப்படாமல், பாதை மாற்றி, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024