Monday, November 19, 2018


'கஜா' புயல் பாதிப்பு; விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்த முழு விவரம்

Published : 18 Nov 2018 21:11 IST

சென்னை




‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

* புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருவாரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறை கோட்டத்தில் பாதிப்பைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு

* அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

* பாலிடெக்னிக் கல்லூரிகளில் திங்கட்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகள் நவ.26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* புதுக்கோட்டையில் மன்னர் அரசு கல்லூரியில் இம்மாதம் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நவ.26- ம் தேதி மன்னர் அரசு கல்லூரி திறக்கப்பட்ட பின் மறுதேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024