Monday, November 19, 2018


இன்று சர்வதேச ஆண்கள் தினம்* *19-11-2018






🤵ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.*

*🤵உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.* *🤵மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது.*

🤵 *“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” அவர்களுக்கு வாழ்நாளில் என்னதான் பிரச்னை உண்டு என சிலர் கேள்வி கேட்கின்றனர்.* *ஆனால் உண்மை அப்படியல்ல. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு. அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன. ஆணுக்கும் பாலியல் தொந்தரவு உள்ளது என்பதை நம் சமூகம் நிச்சயம் உணர வேண்டும்.* *அவனின் பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் நிச்சயம் ஒருநாள் கடைபிடிக்கப்பட வேண்டும்.* *அதுவே இன்றைய நாள். அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்.*

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024