முழுமையாக கரையை கடந்தது கஜா புயல்
Updated : நவ 16, 2018 03:48 | Added : நவ 15, 2018 23:44 |
சென்னை: வேதாரண்யம், நாகை இடையே கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நவ, 1ல், வட கிழக்கு பருவ மழை துவங்கியது. நவ., 6ல், தென் சீன கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, அந்தமானுக்கு நகர்ந்தது. அது, 8ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதியானது. படிப்படியாக வலுப்பெற்று, நவ., 9ல், புயல் சின்னமானது. இந்த புயலுக்கு, இலங்கை வழங்கிய, 'கஜா' என்ற, பெயர் சூட்டப்பட்டது. கஜா புயலின் மிரட்டல் தொடர்ந்தது.
புயல் வேதாரண்யம் -நாகை இடையே 12 மணீக்கு கரையை கடக்கும்அப்போது, மணிக்கு, 100முதல்110 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும். புயலின் கண் பகுதி கரையை தொடும் என, வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு எச்சரித்திருந்தது. இதையடுத்து இரவு 12 மணிக்கு புயல் கரையை கடக்க துவங்கியது.
நள்ளிரவு இரவு 2: 30 மணியளவில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாதவது, கஜா புய முழுமையாக கரையை கடந்துவிட்டதாக தெரிவித்தது. புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் கனமழை காரணமாக பாம்பன் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.கஜா புயல் காரணமாக 6 மாவட்டங்களில் 431 மையங்களில் 81 ஆயிரத்து 698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment