Friday, January 4, 2019

5 ரூபாய் டாக்டருக்கு சட்டசபையில் அஞ்சலி

Added : ஜன 04, 2019 02:07

சென்னை:தமிழக சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு, நேற்று இரங்கல் தெரிவித்து, மூன்று முறை மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை நேற்று துவங்கியதும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எஸ்.டி.உக்கம்சந்த், கனகதாரா, சண்முகநாதன், நாகூர் மீரான், வெங்கடேசன், மலைச்சாமி, பரிதிஇளம்வழுதி, சந்திரசேகரன், வீரய்யன், சந்தானம், தனபால், உலகரட்சகன் ஆகிய, 12 பேர் மறைவுக்கு, சபாநாயகர் இரங்கல் குறிப்பு வாசித்தார். பின், அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிடங்கள், மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண்சிங், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், 5 ரூபாய் டாக்டரான, மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன், 'கஜா' புயலில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு, இரங்கல் தெரிவித்து, அனைவரும் இரண்டு நிமிடங்கள், மவுன அஞ்சலி செலுத்தினர்.

அடுத்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ், தி.மு.க., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...