Saturday, January 12, 2019

important!!! தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.

செல்போன் தவற விட்டால் பதறாமல் இருந்த
இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம்.

அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.

தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறதா.
இது உண்மை.

இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

find my device

find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.

உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.

அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

By K.VisvaKaviarasan-

Police Department, Chennai.

Thanks : Umakanth Tamizh Kumaran Sir Posted by SSTA

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...