Sunday, July 7, 2019

சேலையூர் ஏரி சீரமைப்பு பணி தன்னார்வ அமைப்பினர் ஆர்வம்

Added : ஜூலை 07, 2019 00:36



சேலையூர்:தாம்பரம் அடுத்த, சேலையூர் ஏரியில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து, 31வது வாரமாக, நேற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டன.

கடந்த ஆண்டு, பருவமழை பெய்யாததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டன; நிலத்தடி நீரும் வற்றிவிட்டது.இதனால், நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் வகையில், 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, பொதுமக்கள், பொது நலச்சங்கங்கள், நீர் நிலைகளை துார் வார வலியுறுத்தி, நம் நாளிதழில், அறிவிப்பு வெளியிட்டதோடு, விழிப்புணர்வு செய்திகளும் வெளியிடப்படுகின்றன.இந்நிலையில், தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட, சேலையூர் ஏரியை சீரமைக்க, 'எகோ சொசைட்டி ஆப் இந்தியா' என்ற, தன்னார்வ அமைப்பு திட்டமிட்டது.ஆர்வமுள்ள இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், ஏரி சீரமைப்பு பணியில் பங்கேற்கலாம் என, அந்த அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது.இதன்படி, நேற்று காலை, சேலையூர் ஏரியை சீரமைக்கும் பணியில், எகோ சொசைட்டி ஆப் இந்தியா, சபரி பசுமை அறக்கட்டளை, மக்கள் பாதை, சேவாபாரதி தமிழ்நாடு, 360 இளைஞர்கள் குழு ஆகிய அமைப்புகள் சேர்ந்து, ஏரி சீரமைப்பு பணியில் ஈடுபட்டன.இந்த அமைப்புகளின், 50க்கும் மேற்பட்டோர், ஏரியில் இருந்த குப்பை, பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்தனர்.காலை, 10:00 மணி வரை, சீரமைப்பு பணி நடந்தது.

இது குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:தொடர்ந்து, 31வது வாரமாக, சேலையூர் ஏரியை சுத்தம் செய்கிறோம். ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு பகுதியில் உள்ள குப்பை, கழிவுகளை அகற்றி வருகிறோம்.நாங்கள் எடுக்கும் குப்பையை, சாக்கு மூட்டையில் கட்டி வைத்து விடுவோம். அவற்றை நகராட்சியினர் எடுத்துச் செல்வர்.ஏரியில், சகதி அதிகமாக உள்ளதால், சுத்தம் மட்டுமே செய்கிறோம். தண்ணீர் வற்றியவுடன், பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்று, துார் வாருவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024