Monday, July 8, 2019

ஏழை மாணவர் கல்வி தொகை அரசு மறுப்பதை எதிர்த்து வழக்கு

Added : ஜூலை 07, 2019 01:50

சென்னை:தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த, ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேலகரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, எஸ்.சுப்பையா தாக்கல் செய்த மனு:தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த, ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை பெற உரிமையில்லை என, மத்திய சமூக நீதித்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பாதிப்புஅனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கும், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர், ௨௦௧௯ ஜூனில் கடிதம் அனுப்பி உள்ளார்.அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றவர்களுக்கு மட்டுமே, கல்வி உதவித்தொகை பொருந்தும்; நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது என, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த, ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை மறுப்பது, அவர்களை பாதிக்கும்.

தற்போது, பொறியியல் கல்லுாரியில், மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கி உள்ளது. உத்தரவுஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை என்றால், பொறியியல் படிப்பு பற்றி, அவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது.எனவே, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த, சேரும் மாணவர்களுக்கு, ௨௦௧௮ - ௧௯ம் ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், கே.துரைசாமி ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024