Monday, July 8, 2019

அரசு மருத்துவர்கள் போராட்ட எச்சரிக்கை

Added : ஜூலை 08, 2019 00:49

சேலம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க, 14வது மாநில செயற்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது.பின், அதன் மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: அரசு மருத்துவர்களுக்கு, காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கேட்டு, நான்கு ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதன் காரணமாக, சுகாதாரத் துறை கூடுதல் செயலர், நாகராஜ் தலைமையில், அமைக்கப்பட்ட மூவர் குழு, ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைத்தது. அதற்கு ஒப்புதல் அளித்த அரசு, இன்னமும் செயல்படுத்தவில்லை. 

வரும், 16ம் தேதி நடக்கும் சுகாதாரத் துறை மானிய கோரிக்கையின் போது, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் அறப் போராட்டங்களில் ஈடுபடுவோம். வரும் கூட்டத்தொடரில், கோரிக்கைகளை ஏற்கா விட்டால், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து, ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.குறிப்பாக, மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை, முழுவீச்சில் செயல்படுத்த வலியுறுத்தி, தர்ணா, உண்ணாவிரதம் போன்ற, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024