திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் சாவு, செவிலியர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் - டாக்டர் மீது விசாரணை நடத்த உத்தரவு
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் இறந்தது தொடர்பாக செவிலியர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் டாக்டர் மீது விசாரணை நடத்தவும் மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
பதிவு: ஆகஸ்ட் 03, 2019 04:30 AM
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் திருக்களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மனைவி பவிதா(வயது 30). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 24-ந் தேதி பவிதாவுக்கு குடவாசல் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்தின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பவிதாவை சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி பவிதா மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தவறான சிகிச்சை காரணமாக பவிதா உயிரிழந்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் உயிரிழந்தது தொடர்பாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அன்று பணியில் இருந்த செவிலியர்கள் உதயகுமாரி, பாரதி, திவ்யா மற்றும் தற்காலிக ஊழியர்கள் ரவிக்குமார், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அன்று பணியில் இருந்த டாக்டர் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment