இந்தியாவில் விற்பனையாகும் 49 மருந்துகள் தரமற்றவை
Added : நவ 03, 2019 02:44
சென்னை:'இந்தியாவில் விற்பனையாகும், 49 மருந்துகள்தரமற்றவை' என, மத்திய மருந்து தரகட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும், சந்தையில் உள்ள மருந்துகளின் தரம் குறித்து, மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்து, தரமற்ற மருந்துகள் இருந்தால், அதன் விற்பனையை தடை செய்து வருகின்றன. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், 2,085 மருந்துகளை, மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்தன. அவற்றில், 2,036 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய, காய்ச்சல், சளி, குடற்புழு நீக்கம், கிருமி தொற்று, வயிற்றுப் புண் ஆகியவற்றுக்கான, 49 மருந்துகள் தரமற்றவை. இவை, குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது. தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்தவிபரங்களை, https://cdscoonline.gov.in என்ற இணைதளத்தில், மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment