Sunday, November 3, 2019

பயணிக்கு மூச்சு திணறல் விமானம் நிறுத்தம்

Added : நவ 03, 2019 02:51

சென்னை:பெங்களூரு புறப்பட்ட விமானத்தில், பயணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அந்த விமானம், ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமானம், 84 பயணியருடன், பெங்களூரு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்துவங்கிய நிலையில், அதில் பயணித்த, சென்னையைச் சேர்ந்த சுஜித் சுனில், 43, என்பவருக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது குறித்து, விமான சிப்பந்திகள், பைலட்டிடம் தகவல் தெரிவித்தனர். பைலட், ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.

அந்த விமானம், இழுவை வண்டிகள் உதவியுடன், புறப்பட்ட இடத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டது. தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட சுஜித் சுனிலை, விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் விமானம், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஒரு மணி நேரம் தாமதமாக, பெங்களூரு புறப்பட்டுச் சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024