Sunday, November 3, 2019


முதல் தலைமுறை மாணவருக்கு கட்டணம் ரத்து: அரசு விளக்கம் 


கோப்புப் படம்

சென்னை

முதல் தலைமுறை மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்வது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டம் 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் 2017-ம் ஆண்டு ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து உயா்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை முதல் தலைமுறை மாணவர்களுக்கு ரத்து செய்வதில் கல்லூரிகளிடம் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘தமிழக அரசின் கட்டண நிா்ணயக்குழு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கட்டணத்தை மாற்றிய அமைத்து வருகிறது. அதன்படி தற்போது கட்டணக்குழு உயர்த்திய கல்விக் கட்டணத்தை முதல் தலைமுறை மாணவா்களுக்கு தொடர்ந்து ரத்து செய்ய வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...