Wednesday, February 19, 2020

`பிரசவத்துக்குப் பிறகு, தந்தைக்கும் சம்பளத்துடன் 7 மாத விடுமுறை!' - ஃபின்லாந்தின் அதிரடித் திட்டம்

ஜெ.நிவேதா 19.02.2020  vikatan
பேரன்டல் லீவ்

`இனி, ஏழு மாத பேரன்டல் லீவ்!' - அசத்தும் ஃபின்லாந்து அரசு.

கர்ப்ப கால விடுப்பு மற்றும் குழந்தை பிறப்புக்குப் பிறகான விடுப்புக் காலம்... இவை இரண்டும், உலகம் முழுவதும் நிலவிவரும் மிகமுக்கியமான விவாதப்பொருள். `நானெல்லாம் பிரசவத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்புவரை வேலை பார்த்தேன்' - `பாப்பா பொறந்து மூனே மாசத்துல, பழையபடி வேலைக்கு வந்துட்டேன்' என்றெல்லாம் சொல்லும் தாய்மார்கள் நம் ஊரில் அதிகம். இந்த நிலையில், உலகமே வியக்கும் வகையிலான முடிவொன்றை எடுத்துள்ளது ஃபின்லாந்து அரசு.

பிரசவ கால விடுமுறை

அப்படி என்ன முடிவென்கிறீர்களா? ஃபின்லாந்து நாட்டில் குழந்தை பிறப்புக்குப் பிறகு பெற்றோர் கடமைக்கான விடுமுறையை, ஏழு மாதம் என அறிவிக்க முடிவெடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இந்த விடுமுறைக் காலத்தை, சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம் அதிகாரிகள்.

இந்த விடுமுறையின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில், அம்மாவுக்கு மட்டுமன்றி அப்பாவுக்கும் ஏழு மாத விடுமுறை உண்டு. வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பேரன்டல் லீவ்

இப்போதைய நிலவரப்படி, ஃபின்லாந்தில் பிரசவகால விடுமுறை, பெண்களுக்கு நான்கு மாதமென உள்ளது. ஆண்களும்கூட, தம் மனைவியின் பிரசவ காலத்தையொட்டி 2 -3 மாதங்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளும் வசதி ஃபின்லாந்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரப்போகும் புதிய திட்டத்தின் ஒருபகுதியாக, பெற்றோர் இருவரும் தங்களுக்கிடையிலான விடுமுறையை ஷேர்கூட செய்துகொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. உதாரணத்துக்கு, அப்பாவின் ஏழு மாத கால விடுப்பிலிருந்து அம்மா சில காலத்தைப் பெற்று, தனது விடுப்பை நீட்டித்துக்கொள்ளலாம். அப்பாக்களுக்கும் இந்த ஷேர் ஆப்ஷன் பொருந்துமாம்!

பேரன்டல் லீவ்

இத்தனை நன்மைகளைக் கொண்டுள்ள இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்புக்காக, ஃபின்லாந்து மட்டுமன்றி உலகம் முழுவதுமுள்ள பெற்றோர் காத்திருக்கின்றனர். காத்திருப்போம் மக்களே!

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...